Connect with us
karthick

Cinema History

அவள நீ கல்யாணம் பண்ணக்கூடாது!.. நடிகையை காதலித்த கார்த்திக்கு கட்டய போட்ட முத்துராமன்…

Actress Karthick: கார்த்திக் தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் முன்னணி நடிகராக வலம் வந்தவர். இவர் தனது சிறப்பான நடிப்பின் மூலம் நவரசநாயகன் எனும் பெயரை பெற்றார். இவர் பல்வேறு வேடங்களின் மூலம் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கினார்.

இவர் தமிழில் அலைகள் ஓய்வதில்லை திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். இப்படத்தில் இவருக்கு ஜோடியாக நடிகை ராதா நடித்திருந்தார். இப்படம் மக்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றது. மேலும் இவர் பல வெற்றித்திரைப்படங்களையும் கொடுத்துள்ளார்.

இதையும் வாசிங்க:ஆன்மீகம்னா என்ன தெரியுமா? எவ்ளோ டக்கரா சொல்லிருக்காரு…. சமுத்திரக்கனி சொல்றதைக் கேளுங்கப்பா…

இவர் நடித்த அக்னி நட்சத்திரம், கோபுர வாசலிலே, கிழக்கு வாசல் போன்ற திரைப்படங்கள் இவருக்கு நல்ல ஒரு செல்வாக்கை மக்கள் மத்தியில் பெற்று தந்தன. மேலும் இவர் நடித்த ஆனந்த பூங்காற்றே, உனக்காக எல்லாம் உனக்காக போன்ற திரைப்படங்களின் மூலம் இவர் இளசு முதல் பெரிசு வரை அனைவரின் மனதையும் கட்டிப்போட்டார்.

இவரின் ஆரம்பகாலத்தை பற்றி பிரபல யூடியூபரும், திரைப்பட விமர்சகருமான பயில்வான் சமீபத்தில் ஒரு செய்தியை வெளியிட்டுள்ளார். அதன்படி கார்த்திக்கிற்கும் நடிகை ராதாவிற்கும் இடையே ஆரம்பகாலத்தில் காதல் இருந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

இதையும் வாசிங்க:ஒரே நாளில் இரண்டு படங்கள் ரிலீஸ்!. ரெண்டுமே சூப்பர் ஹிட்!.. கெத்து காட்டிய நடிகர் திலகம்…

மேலும் அக்காதல் இவர்கள் இருவரும் ரகசிய திருமணம் செய்யும் அளவிற்கு சென்றதாகவும் கூறியுள்ளார். ஆனால் இவர்களின் காதலுக்கு கார்த்திக்கின் தந்தையான நடிகர் முத்துராமன் சம்மதம் தெரிவிக்கவில்லையாம். நடிகையை திருமணம் செய்து கொள்ள கூடாது என மிகவும் கண்டிப்புடன் கூறிவிட்டாராம்.

மேலும் ராதாவின் தாயும் இதற்கு சம்மதிக்கவில்லையாம். சினிமாவில் ஒரு அந்தஸ்து வந்தபின்னும் மேலும் மார்க்கெட் சரிந்த பின்னரும் திருமணம் செய்து கொள்ளுமாறு கூறிவிட்டாராம். இரு வீட்டின் சம்மதமும் இல்லாததால் இவர்கள் இருவரும் நாளடைவில் பிரிந்து விட்டனராம். பின் ராதா நட்சத்திர ஹோட்டல் ஓனரை திருமணம் செய்து கொண்டாராம். இவ்வாறு பயில்வான் தெரிவித்துள்ளார்.

இதையும் வாசிங்க:டி.எம்.எஸ் வேண்டாம்!.. இந்த பாட்டை அம்மு பாடட்டும்!.. எம்.ஜி.ஆர் சொன்ன பாடல் எது தெரியுமா?..

google news
Continue Reading

More in Cinema History

To Top