Connect with us
balachander kamal

Flashback

வசூல்ராஜாவுக்கு ‘நோ’ உத்தமவில்லனுக்கு ‘ஓகே’… பாலசந்தர் முடிவுக்கு இதான் காரணமா?

கமல் நடித்த வசூல்ராஜா படத்துல பாலசந்தரை நடிக்க அழைத்தார்களாம். ஆனால் அவர் படத்தில் நடிக்க மறுத்துவிட்டார். அதே நேரம் கமல் நடித்த உத்தமவில்லன் படத்தில் பாலசந்தர் நடிக்க சம்மதித்து விட்டார். இதற்கு என்ன காரணமாக இருக்கும் என்று பலருக்கும் கேள்வி எழலாம். இதுகுறித்து ரசிகர் ஒருவர் கேட்ட கேள்விக்கு பிரபல தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணன் இப்படி பதில் சொல்லி இருக்கிறார்.

வசூல்ராஜா எம்பிபிஎஸ் படத்தின் கதாநாயகன் கமல், இயக்குனர் சரண். இவர்கள் பாலசந்தரை எந்தக் கதாபாத்திரத்தில் நடிக்க வைக்க ஆசைப்பட்டாங்க தெரியுமா? நாகேஷ் கதாபாத்திரம். இதைக் கேட்ட உடனே பாலசந்தர் நிச்சயம் நமக்கு இது செட்டாகாதுன்னு தெரிந்து போனது.

அதனால்தான் அவர் சென்னையில் இருந்து மும்பைக்கு எஸ்கேப் ஆகிவிட்டார். அதே நேரம் உத்தமவில்லன் படத்தில் அவர் நடிக்க என்ன காரணம் என்றால் அந்தக் கதாபாத்திரம்தானாம். அது அவரது அன்றாட வாழ்க்கைக்கு மிக நெருக்கமாக இருந்ததாம்.

vasool raja mbbs

vasool raja mbbs

2015ல் ரமேஷ் அரவிந்த் இயக்கத்தில் கமல் உடன் இயக்குனர் சிகரம் பாலசந்தர் உத்தமவில்லன் படத்தில் இணைந்து நடித்தார். இந்தப் படத்தில் அவர் ஒரு இயக்குனராகவே நடித்தார். மார்க்கதரிசி என்ற கேரக்டரில் அவரது நடிப்பு செம மாஸாக இருந்தது. இதுதான் அவர் நடித்த கடைசி படம்.

இந்தப் படத்தில் தனது குருநாதரை எப்படியாவது நடிக்க வைத்து விட வேண்டும் என்று கமல் ஆசைப்பட்டார். அதுபோலவே நடந்து விட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இது ஒரு ஆர்ட் பிலிம் மாதிரி இருந்தததால் ரசிகர்கள் மத்தியில் படம் பெரிய அளவில் வரவேற்பைப் பெறவில்லை.

அதே நேரம் 2004ல் சரண் இயக்கத்தில் கமல், பிரபு, பிரகாஷ்ராஜ், சினேகா, நாகேஷ், மாளவிகா உள்பட பலரும் நடித்த வசூல் ராஜா எம்பிபிஎஸ் படம் சக்கை போடு போட்டது. பரத்வாஜின் இசையில் ஆழ்வார் பேட்டை ஆண்டவா பாடல் இந்தப் படத்தில்தான் இடம்பெற்றுள்ளது.

google news
Continue Reading

More in Flashback

To Top