எதிர்ப்பை மீறி உன்ன நடிக்க வைக்கிறேன்.. நிரூபிச்சி காட்டு!.. கமலுக்கு டெஸ்ட் வைத்த பாலச்சந்தர்..

Published on: February 1, 2024
kamal
---Advertisement---

கமல் இப்போது உலக நாயகனாக இருந்தாலும் அவரை ஒரு முழு நடிகராக உருவாக்கிய பங்கு இயக்குனர் பாலச்சந்தருக்கு உண்டு. கமல் 5 வயதில் களத்தூர் கண்ணம்மா படத்தில் அறிமுகமாகி தொடர்ந்து பார்த்தால் பசிதீரும், ஆனந்த ஜோதி என சில படங்களில் நடித்தார்.

டீன் ஏஜை எட்டியவுடன் தங்கப்பன் எனும் நடன இயக்குனரிடம் உதவியாளராக சேர்ந்து பல படங்களிலும் வேலை செய்தார். ஒருகட்டத்தில் நடன இயக்குனர் ஆவதா, நடிப்பதா, இயக்கம் பக்கம் செல்வதா என அவருக்கு ஒரே குழப்பமாக இருந்தது. அப்போது ஜெமினி கணேசன் பெரிய நடிகராக இருந்தார். பாலச்சந்தரின் இயக்கத்தில் தொடர்ந்து நடித்து வந்தார்.

இதையும் படிங்க: இந்த படத்துல கமல் வேண்டாம்!.. தூக்கி போடுங்க!.. இயக்குனருக்கு வந்த நெருக்கடி…

அவருக்கு கமல் மீதும் அதிக அன்பும் உண்டு. ஒருமுறை, அவரை அழைத்துக்கொண்டு பாலச்சந்தரை பார்க்கப்போனார். அப்போது ‘இவன் நன்றாக நடிப்பான். மிகவும் திறமைசாலி. இவனை பயன்படுத்திக்கொள்ளுங்கள்’ என சொன்னார். அப்போது கமலுக்கு டீன் ஏஜ். அவரை ஹீரோவாக நடிக்க வைக்க பாலச்சந்தர் விரும்பவில்லை என்றாலும் கமலின் முகம் அவருக்கு மனதில் பதிந்து போனது.

KamalHaasan and K Balachander
KamalHaasan and K Balachander

எனவே, அரங்கேற்றம் உள்ளிட்ட சில படங்களில் கமலுக்கு சின்ன சின்ன வேடங்கள் கொடுத்தார். ஒருமுறை ‘சொல்லத்தான் நினைக்கிறேன்’ என்கிற படத்தை இயக்க பாலச்சந்தர் முடிவெடுத்தார். அப்படத்தின் ஹீரோ சிவக்குமார். அதில், கமலுக்கு முக்கிய வேடம். ஆனால், அந்த வேடத்தில் அவரை போடக்கூடாது என பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதையும் படிங்க: கமல் படம் தேறுமா தேறாதா? அஜித்தை வைச்சு டெஸ்ட் பண்ண இயக்குனர்.. கடைசியில் ரிசல்ட்?

ஆனால், பாலச்சந்தர் கமல்தான் அதில் நடிக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார். கமலை அழைத்து ‘இந்த படத்தில் உன்னை நடிக்கவைக்க பல எதிர்ப்பு. ஆனாலும் உன்னை நம்பி நடிக்க வைக்கிறேன். இதில் உன்னை நிரூபித்து காட்ட வேண்டும்’ என சொன்னார். அவர் சொன்னதை கமல் அப்படியே செய்தார். கமலின் வித்தியாசமான நடிப்பு ரசிகர்களுக்கு மிகவும் பிடித்துப்போனது. கமலை போட வேண்டாம் என சொன்னவர்கள் வாயை மூடிக்கொண்டனர்.

சிவா

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.