Connect with us
bala

Cinema News

மாபெரும் ஜாம்பவான்களை அறிமுகப்படுத்திய பாலசந்தர்!.. அவரை சினிமாவிற்குள் கொண்டு வந்தவர் யார் தெரியுமா?..

தமிழ் சினிமாவில் ஒரு அடையாளமாக கருதப்பட்டவர் இயக்குனர் சிகரம் கே.பாலசந்தர். சினிமாவிற்குள் வருவதற்கு முன் நாடக மேடையில் பணிபுரிந்து கொண்டிருந்தார் பாலசந்தர். யாரிடமும் உதவி இயக்குனராக பணிபுரியாமல் நேரிடையாக இயக்குனராக வந்தவர் பாலசந்தர்.

ஏகப்பட்ட நடிகர்களை வைத்து படம் இயக்கிய பாலசந்தர் எம்ஜிஆரை வைத்து மட்டும் படம் இயக்கியதே இல்லை.ஆனால் எம்ஜிஆரின் ஒரே ஒரு படத்திற்கு மட்டும் வசனம் எழுதியிருக்கிறாராம். மேலும் இன்று தமிழ் சினிமாவின் இரு பெரும் ஆளுமைகளாக இருக்கும் ரஜினி மற்றும் கமலை சினிமாவிற்குள் அறிமுகப்படுத்திய பெருமை பாலசந்தரை மட்டுமே சேரும்.

மேலும் 80களில் இவரால் அறிமுகம் செய்யப்பட்ட பல நடிகைகள் முன்னனி நடிகைகளாகத்தான் வலம் வந்தார்கள். இப்பேற்பட்ட பாலசந்தரை அறிமுகப்படுத்தியவர் யார் என்பதை தெரிந்து கொள்ள வேண்டும். முதன் முதலில் ‘ நீர்க்குமிழி’ என்ற படத்தின் மூலம் தான் பாலசந்தர் இயக்குனராக அறிமுகமானார்.

அவரை இயக்குனராக அறிமுகப்படுத்திய பெருமை பிரபல தயாரிப்பாளரும் கதாசிரியருமான ஏ.கே.வேலனையே சேரும். அவரிடம் பாலசந்தர் நீர்க்குமிழ் கதையை சொல்லியிருக்கிறார். அந்தக் கதை வேலனுக்கு மிகவும் பிடித்துப் போக ‘ நீயே இந்தக் கதையை படமாக இயக்கலாமே’ என்று பாலசந்தரிடம் சொன்னாராம்.

ஆனால் பாலசந்தரோ ‘ நானா? எனக்கு இயக்கத்தை பற்றியெல்லாம் ஒன்றும் தெரியாது’ என்று சொல்லியிருக்கிறார். அதற்கு வேலன் ‘என்னிடம் எப்படி இந்தக் கதையை தெளிவாக கூறி புரிய வைத்தாயோ அதே போல படத்திலும் தெளிவாக காட்டி புரிய வைத்தால் போதும்’ என்று சொல்ல ,

இதையும் படிங்க : தமிழ் சினிமாவில் விஜயகாந்த் செய்த பெரும் சாதனை.. சிவாஜி கணேசனே அதுக்கு அப்புறம்தான்!..

அதன் பிறகு தான் நீர்க்குமிழ் படத்தை இயக்கும் பொறுப்பை ஏற்றாராம் பாலசந்தர். அந்தப் படம் எப்பேற்பட்ட வெற்றிப்படமாக அமைந்தது என அனைவருக்கும் தெரியும். இப்படி தான் சினிமாவில் எண்ட்ரியானாராம் பாலசந்தர். இந்த சுவாரஸ்ய தகவலை சித்ரா லட்சுமணன் கூறினார்.

google news
Continue Reading

More in Cinema News

To Top