பாலசந்தருக்கும் ரஜினிக்கும் நெருக்கமான அந்த பண்டிகை!..கேக் வெட்டி கொண்டாடும் காரணம் என்ன தெரியுமா?..
நல்ல ஒரு மனிதர், கருப்பு தங்கம், சூப்பர் ஸ்டார் என பலராலும் அன்பால் அழைக்கப்படும் ரஜினியை தமிழ் சினிமாவிற்கு அழைத்து வந்தவர் இயக்குனர் சிகரம் பாலசந்தர். பாலசந்தர் மீது அலாதி பிரியம் கொண்டவர் ரஜினிகாந்த்.தன்னை அறிமுகப்படுத்திய பாலசந்தரை பல மேடைகளில் நினைவு கூறாமல் இருந்ததில்லை ரஜினி.
அனைத்து மேடைகளிலும் பாலசந்தருக்கு நன்றியை மறக்காமல் தெரிவித்து விடுவார். இவர் நடிக்க வருவதற்கு முன்பே அவர்கள், அவள் ஒரு தொடர்கதை , மேஜர் சந்திரகாந்த் போன்ற பாலசந்தரின் படங்களை பார்த்து வியப்படைந்தவர் ரஜினி. எப்படியாவது அவரை பார்த்து விட வேண்டும் என்ற எண்ணமும் அவருள்ளே இருந்து கொண்டே இருந்தது.
இதையும் படிங்க : நயன்தாரா நடிக்கிறாங்களா?..இந்த படமே வேண்டாம்!..இது என்னடா செல்வராகவனுக்கு வந்த சோதனை!..
ரஜினி ஃபிலிம் இன்ஸ்டிட்யூட்டில் படித்து கொண்டிருந்த போது அங்கு நடந்த ஒரு விழாவிற்கு பாலசந்தர் தலைமை தாங்க வந்திருந்தாராம். ஒரு சமயத்தில் ரஜினியை பார்த்ததும் பாலசந்தருக்கு ஒரு ஈர்ப்பு ஏற்பட்டு விட்டதாம். அதை அப்படியே விட்டு விட்டு திரும்பும் வழியில் ரஜினியிடம் மறுமுறை உன்னை சந்திக்கிறேன் என்று கூறிவிட்டு சென்றிருக்கிறார் பாலசந்தர். அதன் பின் நாள்கள் போக அபூர்வ ராகங்கள் படத்திற்காக நடிகர்களை தேடும் பணியில் இருக்கும் போது ஃபிலிம் இன்ஸ்டிட்யூட்டில் ரஜினியை பார்த்தது நியாபகம் வந்திருக்கிறது.
இதையும் படிங்க : இனிமே ஃபுல் கவர்ச்சிதான்!..வேற லெவலில் இறங்கி அடிக்கும் முல்லை நடிகை….
உடனே ரஜினியை வரவழைத்து உனக்கு தமிழ் தெரியுமா? என கேட்டிருக்கிறார் பாலசந்தர். தெரியாது என சொல்ல சீக்கிரம் கற்றுக் கொள், உன்னை ஒரு படத்தில் சின்ன ரோலுக்காக தேர்ந்தெடுத்திருக்கிறேன் என்று சொல்லி பெயரை கேட்டிருக்கிறார். சிவாஜி ராவ் என ரஜினி சொன்னதும் தமிழ் சினிமாவில் ஏற்கெனவே ஒரு சிவாஜி இருக்கிறார். மற்றுமொரு சிவாஜி வேண்டாம் என கருதி ஒரு ஹோலி பண்டிகை நாளில் சிவாஜிராவை ரஜினி என பெயர் மாற்றம் செய்திருக்கிறார் பாலசந்தர். அன்றிருந்து ஒவ்வொரு ஹோலி பண்டிகை நாளிலும் ரஜினியை வீட்டிற்கு வரவழைத்து கேக் வெட்டி கொண்டாடி மகிழ்வாராம் பாலசந்தர்.