Connect with us
Selvaraghavan and Nayanthara

Cinema News

நயன்தாரா நடிக்கிறாங்களா?..இந்த படமே வேண்டாம்!..இது என்னடா செல்வராகவனுக்கு வந்த சோதனை!..

தனுஷை வைத்து பல முக்கிய வெற்றித் திரைப்படங்களை தமிழ் சினிமாவிற்கு கொடுத்த இயக்குனர் மித்ரன் ஆர் ஜவஹர். இவர் தொடக்க காலத்தில் இயக்குனர் செல்வராகவனிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்தார்.

மித்ரன் ஆர் ஜவஹர், “யாரடி நீ மோகினி”, “குட்டி”, “உத்தம புத்திரன்”, “திருச்சிற்றம்பலம்” போன்ற பல திரைப்படங்களை இயக்கியுள்ளார். இதில் “யாரடி நீ மோகினி” திரைப்படம், தெலுங்கில் செல்வராகவன் இயக்கத்தில் வெளிவந்த “ஆடவரி மாட்டலாக்கு அர்த்தலே வேருலே” என்ற திரைப்படத்தின் ரீமேக் ஆகும்.

Mithran R. Jawahar

Mithran R. Jawahar

இந்த நிலையில் “யாரடி நீ மோகினி” திரைப்படத்தை இயக்கும்போது தனக்கு நேர்ந்த அனுபவங்கள் குறித்து சமீபத்திய பேட்டி ஒன்றில் பகிர்ந்துள்ளார் மித்ரன் ஆர் ஜவஹர்.

தனது முதல் திரைப்படமான “யாரடி நீ மோகினி” திரைப்படத்திலேயே தனுஷ், நயன்தாரா, ரகுவரன், கே.விஸ்வநாத் போன்ற பெரிய பெரிய நடிகர்களை வைத்து இயக்கும் வாய்ப்பு கிடைத்ததால் இயக்குனருக்கு ஒரு வித பயம் இருந்ததாம்.

Yaaradi Nee Mohini movie

Yaaradi Nee Mohini movie

தெலுங்கு படத்தை தமிழுக்கு ஏற்றவாறு ரீமேக் செய்யவேண்டும், தெலுங்கில் நடித்தவர்களின் நடிப்பு வேறு மாதிரி இருந்தது. தமிழில் வேறு மாதிரி இருந்தது. ஆதலால் இது சரி வருமா என்ற குழப்பமும் இருந்ததாம். இரண்டு நாட்கள் படப்பிடிப்பு நடந்து முடிந்த நிலையில் இந்த படத்தை அப்படியே நிறுத்திவிடலாம் என்று கூட மித்ரனுக்கு தோன்றியதாம்.

இதையும் படிங்க: “எனக்கு நேஷனல் அவார்டா? என்ன கலாய்க்குறீங்களா?”… உறக்கத்தில் இருந்த சரண்யாவை கடுப்பேத்திய நபர்…

Selvaraghavan

Selvaraghavan

இந்த நிலையில்தான் இத்திரைப்படத்தின் படத்தொகுப்பாளரான கோலா பாஸ்கர், செல்வராகவனை அழைத்து மித்ரன் குழப்பத்தில் இருப்பதாக கூறியிருக்கிறார். அதனை தொடர்ந்து செல்வராகவன், இதுவரை எடுத்தவரையிலான காட்சிகளை திரையிட்டுப்பார்த்து “படம் நன்றாக வந்திருக்கிறது, தைரியமாக படத்தை எடுக்கச்சொல்” என்று மித்ரனுக்கு தைரியம் கூறினாராம். அதன் பின்புதான் மித்ரன் அத்திரைப்படத்தின் படப்பிடிப்பை மீண்டும் தொடங்கினாராம்.

Yaaradi Nee Mohini

Yaaradi Nee Mohini

“யாரடி நீ மோகினி” திரைப்படம் தனுஷின் திரைப்பயணத்திலேயே மிகவும் முக்கியமான வெற்றிப்படமாக அமைந்திருந்தது குறிப்பிடத்தக்கது.

google news
Continue Reading

More in Cinema News

To Top