Cinema History
சிவாஜி கணேசனை காப்பி அடிக்காத ஒரே நடிகன் இவன்தான்… பாலச்சந்தர் யாரை சொன்னார்ன்னு தெரியுமா??
நடிகர் திலகம் என்று போற்றப்படும் சிவாஜி கணேசன், நடிப்பிற்கே பல்கலைக்கழகமாக திகழ்ந்தவர் என்பதை சினிமா ரசிகர்கள் பலரும் அறிவார்கள். தமிழ் சினிமாவில் தற்போது டாப் நடிகர்களாக திகழ்ந்து வருபவர்களின் முன்னோடியாக திகழ்ந்தவர் சிவாஜி கணேசன்.
சிவாஜி கணேசனின் நடிப்பிற்கு நிகராக எந்த நடிகரையும் ஒப்பிட்டு பார்க்கவே முடியாது. தான் ஏற்று நடித்த ஒவ்வொரு கதாப்பாத்திரத்திற்கும் அத்தனை வித்தியாசங்களை காட்டியவர் சிவாஜி கணேசன். அந்த அளவிற்கு தன்னிகரில்லாத நடிகராக திகழ்ந்தார்.
இந்த நிலையில் பிரபல இயக்குனரான பாலச்சந்தரிடம் ஒரு பத்திரிக்கையாளர், “சிவாஜி கணேசனின் நடிப்பிற்கும் கமல்ஹாசனின் நடிப்பிற்கும் என்ன வித்தியாசம்?” என்று கேட்டாராம். அதற்கு பாலச்சந்தர் ஒரு அசரவைக்கும் பதில் ஒன்றை கூறியுள்ளார்.
“செய்யுளுக்கும் கவிதைக்கும் என்ன வித்தியாசம்? எதற்கு நாம் அவர்கள் இருவரையும் ஒப்பிட வேண்டும். தனிதனியாகவே ரசிக்கலாமே” என கூறிய அவர் “சிவாஜிக்கு முன்னோடி என்று எந்த நடிகரையும் கூற முடியாது. ஆனால் அவருக்கு பின்னால் வந்த நடிகர்கள் எல்லோருக்கும் சிவாஜி கணேசன்தான் முன்னோடி.
பாரதியாருக்கு பின்னால் வந்த எல்லா கவிஞர்களிடமும் நிச்சயமாக பாரதியின் பாதிப்பு இருக்கும். அவர்கள் கவிதை, கட்டுரை என எதை எழுதினாலும் எந்த இடத்திலாவது பாரதியார் தென்பட்டுவிடுவார்.
இதையும் படிங்க: இளையராஜாவின் மார்க்கெட்டை பார்த்து ஒதுங்கினாரா கங்கை அமரன்?? இப்படி பண்ணதுக்கு என்ன காரணமா இருக்கும்??
ஆனால் சிவாஜி கணேசனின் சாயலே இல்லாமல் மிகச் சிறந்த நடிகனாக இருப்பவன் என்னுடைய கமல்ஹாசன்தான்” என அந்த பத்திரிக்கை நிருபருக்கு பதிலளித்தாராம் பாலச்சந்தர்.