என்னவொரு முரட்டுத்தனம்!.. மேடையிலேயே அஞ்சலி மேல கையை வச்ச பாலய்யா!.. ஷாக்கிங் வீடியோ!..

Published on: May 29, 2024
---Advertisement---

நடிகை அஞ்சலி நடித்துள்ள தெலுங்கு படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி நேற்று இரவு நடைபெற்றது. அந்த நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட தெலுங்கு திரை உலகின் முன்னணி நடிகர் பாலகிருஷ்ணா எனும் பாலய்யா நடிகை அஞ்சலியை மேடையில் திடீரென பிடித்து தள்ளிய வீடியோ அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி வைரலாகி வருகிறது.

விஸ்வக் சென் நடித்துள்ள கேங்ஸ் ஆப் கோதாவரி திரைப்படம் வரும் மே 31-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. அந்த படத்தில் விஸ்வக் சென்னுடன் இணைந்து நேகா ஷெட்டி மற்றும் அஞ்சலி நடித்துள்ளனர். இவர்கள் மூவரும் பங்கேற்று நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை மாலை ஹைதராபாத்தில் நடைபெற்றது. அந்த நிகழ்ச்சிக்கு தான் சிறப்பு விருந்தினராக பாலய்யா வந்திருந்தார்.

இதையும் படிங்க: நாங்க ரெண்டு பேரும் அதுல கில்லாடி! ‘தக்லைஃப்’ படத்தில் சம்பவம் செய்யப் போகும் கமல், சிம்பு

எப்போதுமே முரட்டுத்தனமான சுபாவம் கொண்ட பாலய்யா படப்பிடிப்புத் தலங்களில் பலரை போட்டு அடிப்பார் என பலர் கூறியுள்ளனர். இந்நிலையில் மேடையில், நடிகை அஞ்சலி திடீரென பிடித்து உலுக்கியது அவர் ஒரு நொடி ஆடிப் போய்விட்டார். ஆனால் விஷயத்தை பெரிதாக்க கூடாது என்று நினைத்தவர், சிரித்துக் கொண்டே அதை அப்படியே சமாளித்து விட்டார்.

அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பாலய்யா வாட்டர் பாட்டில் சரக்கு கலந்து ரகசியமாக குடித்த காட்சிகளும் அம்பலமாகி சர்ச்சையை கிளப்பியுள்ளது. முன்னணி நடிகரான நந்தமுரி பாலகிருஷ்ணா இப்படி மோசமான செயல்களில் பொதுவெளியில் ஈடுபடலாமா என பலரும் அவரை கண்டித்து வருகின்றனர்.

இதையும் படிங்க: நம்ம பாரதி கண்ணம்மா சீரியல் ரோஷினியா இது?!.. சைனிங் உடம்பை காட்டி இழுக்குறாரே!..

பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற விசித்ரா தனக்கு பாலய்யாவால் நடந்த தொல்லைகளை அவரது பெயரை பயன்படுத்தாமல் பேசியது பெரும் சர்ச்சையை கிளப்பியது. தற்போது அஞ்சலி இந்த விவகாரத்தில் பாலய்யா பற்றி எந்தவொரு கண்டனமும் ஏன் தெரிவிக்கவில்லை என பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

Saranya M

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.