எங்களலாம் பாத்தா நடிகனா தெரியலயா?!.. பாலுமகேந்திராவிடம் கர்ஜித்த நடிகர் திலகம்...
தமிழ் சினிமா ஒளிப்பதிவில் மாற்றத்தையும், புதுமையையும் கொண்டு வந்தவர் பாலுமகேந்திரா. புனே திரைப்படக் கல்லூரியில் ஒளிப்பதிவு பாடத்தில் தங்க மெடல் வாங்கியவர் இவர். இவர் முதலில் ஒளிப்பதிவு செய்தது ஒரு மலையாள படத்தில்தான். தமிழில் ஒளிப்பதிவாளராகத்தான் இவர் அறிமுகமானார்.
ரஜினி நடிப்பில் சிறந்த படமாக கருதப்படும் முள்ளும் மலரும் படத்திற்கு ஒளிப்பதிவு செய்தவர் பாலுமகேந்திராதான். அதன்பின் மூடுபனி திரைப்படம் மூலம் இயக்குனராக மாறினார். படம் இயக்குவதற்கு முன்பு அவருக்கு இளையராஜாவுடன் பழக்கம் ஏற்பட்டது. அப்போது அவரின் திறமையை கண்டு வியந்த பாலுமகேந்திரா தான் இயக்கும் முதல் படத்திற்கு ராஜாதான் இசை என முடிவெடுத்தார்.
இதையும் படிங்க: கடைசிவரை மோகன் இதை செய்யவில்லை!.. சிவாஜியை பின்பற்றி ஸ்கோர் செய்த மோகன்!..
அதன்பின் கடைசிவரை பாலுமகேந்திராவின் படங்களுக்கு ராஜா மட்டுமே இசையமைத்தார். பாலுமகேந்திரா ஒரு தீவிரமான சிவாஜி ரசிகர் என்பது பலருக்கும் தெரியாது. சிறு வயதில் இலங்கையில் வசித்தபோது ஒரு சிவாஜி படத்தை விடமாட்டாராம். ஒருமுறை கொழும்புக்கு சிவாஜி சென்றார்.
பாலுமகேந்திரா வீடு இருந்த கிராமத்திலிருந்து பஸ் ஏறிதான் கொழும்பு செல்ல வேண்டும். இதற்காக அப்பாவிடம் காசு கேட்டிருக்கிறார். அவர் கொடுக்கவில்லை என்பதால் கொழும்புக்கு நடந்தே போயிருக்கிறார். சினிமாவில் வளர்ந்து வந்த நேரத்தில் ஒருமுறை பிரபுவை பார்க்க சிவாஜியின் வீட்டிற்கு போயிருக்கிறார் பாலுமகேந்திரா.
அவருக்காக காத்திருந்த போது மாடிப்படியிலிருந்து இறங்கி வந்தார் சிவாஜி. ‘யாரை பார்க்க வந்திருக்க?’ என்பது போல சிவாஜி புருவத்தை உயர்த்த பிரபுவை பார்க்க வந்திருப்பதாக பாலுமகேந்திரா சொல்ல ‘ஏன் எங்களை பாத்தா நடிகனா தெரியலயா?’ என கேட்டிருக்கிறார் சிவாஜி.
இதையும் படிங்க: சிவாஜிக்கே நடித்து காட்டிய இயக்குனர்!.. கண்ணாடி முன்பு இரவு முழுவதும் பயிற்சி எடுத்த நடிகர் திலகம்!
சிவாஜியை வைத்து ஒரு படத்தை இயக்கவேண்டும் என்பது பாலுமகேந்திராவின் கனவாக இருந்தது. இதுபற்றி நடிகர் ஒய்.ஜி.மகேந்திரனிடம் ஒருமுறை அவர் சொல்ல சிவாஜியை சந்திக்க ஏற்பாடு செய்தார். சிவாஜியின் வீட்டில் மதிய உணவு அருந்திக்கொண்டே அவரிடம் பேசினார் பாலுமகேந்திரா.
‘உன் படம்லாம் பாத்திருக்கேன். ரொம்ப நல்லா பண்றே’ என சிவாஜி பாராட்டியதில் உச்சி குளிர்ந்து போனார் பாலுமகேந்திரா. அப்போது அவரிடம் ஒரு கதையை சொன்னார் பாலுமகேந்திரா. விபச்சார விடுதியில் மாட்டிக்கொள்ளும் மகளை மீட்கப்போராடும் ஒரு அப்பாவின் கதை அது. சிவாஜிக்கு அந்த கதை பிடித்திருந்தது. அப்படத்தில் நடிக்க ஆர்வமாகவும் இருந்தார். ஆனால், சில காரணங்களால் அது நடக்காமல் போனது.