படத்தில் நடிக்கும் போது 8ம் வகுப்பு மாணவி! டீச்சர் கேரக்டரா? யாருப்பா அந்த நடிகை?
Banupriya: சினிமாவில் நடிக்க வரும் ஆசையில் எத்தனையோ நடிகைகள் தன் பள்ளிப்படிப்பை எல்லாம் ஓரங்கட்டி விட்டு சினிமாதான் உலகம் என்று வந்து விடுகின்றனர். இன்னும் சிலர் படிப்பை ஒரு பார்ட் டைம் வேலையாகவே மாற்றி விடுவதும் உண்டு. இந்த நிலையில் ஒரு நடிகை வெறும் 8 ஆம் வகுப்பு படித்துக் கொண்டிருக்க சினிமா அவரை உள்ளே இழுத்திருக்கிறது.
படத்தின் கதை மிகவும் பிடித்துப் போக அவரது வீட்டில் உள்ளவர்களும் இதை விட வேறு நல்ல வாய்ப்பு வராது என எண்ணி அந்தப் படத்தில் நடிக்க வைத்திருக்கின்றனர். ஆனால் படத்திலோ டீச்சர் கதாபாத்திரம். 8 ம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கும் அந்த நடிகை ஏற்ற முதல் கதாபாத்திரம் டீச்சர் கதாபாத்திரம்.
இதையும் படிங்க: பிடிக்காத படத்தை ராவுத்தருக்காக ஓகே செய்த கேப்டன்… தியேட்டரை அசரடித்த வசூல் வேட்டை!…
அந்த நடிகை வேறு யாருமில்லை. நடிகை பானுப்ரியாதான். 1983 ஆம் ஆண்டு எட்டாம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கும் போதே கதாநாயகியாக அறிமுகமானவர்தான் பானுப்ரியா, அவர் நடித்த முதல் படம் ‘மெல்ல பேசுங்கள்’ திரைப்படம். இந்தப் படத்தில்தான் பானுப்ரியா டீச்சராக நடித்திருக்கிறார்.
அதுமட்டுமில்லாமல் பானுப்ரியா தூறல் நின்னுப் போச்சு படத்தில் வாய்ப்புக்காக போயிருக்கிறார். ஆனால் அந்த வாய்ப்பு அவருக்கு கிடைக்கவில்லையாம். இதை வைத்து பார்க்கும் போது 1981 ஆம் ஆண்டில் அவர் 6 ஆம் வகுப்பு படிக்கும் போதே அவருடைய பெற்றோர் பானுப்ரியாவுக்காக சினிமா சான்ஸ் கேட்டு அலைந்திருக்கின்றனர் என்பது தெரிகிறது.
இதையும் படிங்க: ரஜினியுடன் போட்டி போட்டு மண்ணைக் கவ்விய படங்கள்… அதே கதி தான் சூர்யாவுக்குமா?
பின் காலத்தில் 80, 90களில் ஒரு முன்னணி நடிகையாகவே வலம் வந்தார் பானுப்ரியா. விஜயகாந்த், கார்த்திக், சத்யராஜ் என அப்போதைய காலகட்டத்தில் முன்னணி நடிகர்களாக இருக்கும் அனைவருடனும் ஜோடி சேர்ந்து நடித்திருக்கிறார். அதுமட்டுமில்லாமல் சீரியலிலும் நடித்தார்,
சமீபகாலமாக குணச்சித்திர வேடங்களில் அதுவும் அம்மா வேடத்தில் பல படங்களில் நடித்திருக்கிறார் பானுப்ரியா. தமிழ் மட்டுமில்லாமல் மற்ற மொழி சினிமாக்களிலும் பானுப்ரியா நடித்திருக்கிறார். அவர் அடிப்படையில் ஒரு பரத நாட்டிய கலைஞரும் ஆவார். பல அரங்கேற்றங்களை நடத்தியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: செல்லாது… செல்லாது.. ஜோதிகாவின் முதல் படம் அஜித் கூட இல்ல… விஜய் படம் தானாம்…