வடிவேலுவை பகைச்சுக்கிட்டா இதுதான் நடக்கும்? பாவா லட்சுமணனுக்கு உயிர் பயத்தை காட்டிய வைகைப்புயல்

by Rohini |   ( Updated:2023-06-28 10:44:05  )
bava
X

bava

தமிழ் சினிமாவில் வடிவேலு என்ற பெயர் கதிகலங்க வைத்துக் கொண்டு வருகின்றது. அதுவும் சமீபகாலமாக வைகைப்புயல் போய் வடிவேலு புயல் என்பதை போல அவரை பற்றிய செய்திகள் பரவி வருகின்றது. அவர் நல்லவரா? கெட்டவரா? என்ற விவாதங்களே நடந்து வருகின்றது. நடிகர் ராஜ்கிரணுக்கு பேச்சுத் துணைக்காக உட்காரவைக்கப்பட்டவர் வடிவேலு.

அந்த நேரத்தில் அவர் பேசிய கிண்டலான பேச்சு, நக்கல் என அனைத்தையும் கவனித்துக் கொண்டிருந்த ராஜ்கிரண் வடிவேலுவை முதன் முதலில் கோடம்பாக்கத்திற்கு அழைத்து வந்தார். அந்த சமயத்தில் நகைச்சுவையில் கவுண்டமணி மற்றும் செந்தில் இருவரும் மிகவும் உச்சத்தில் இருந்தார்கள்.

bava2

bava2

அந்த சமயத்தில் வந்தவர்தான் வடிவேலு. கொஞ்சம் கொஞ்சமாக தன்னுடைய வளர்ச்சியை அதிகரித்து ஒரு வைகைப்புயலாக இன்று ஜொலித்துக் கொண்டிருக்கிறார். எப்படி நாகேஷ் மனோரமா காம்போ இருந்ததோ அதே போல் வடிவேலு - கோவை சரளா என்ற காம்போ மக்களை மிகவும் கவர்ந்தது.

அதே நேரத்தில் விவேக்கும் வடிவேலுக்கு இணையாக டஃப் கொடுத்துக் கொண்டு வந்தார். இருவருக்கும் தனித்தனியாக ஒரு குரூப் இருந்தன. வடிவேலுவின் குரூப்பில் இருக்கும் நடிகர்கள் விவேக் குரூப்பில் வரமாட்டார்கள். அதே போல் விவேக் குரூப் இருக்கும் நடிகர்கள் வடிவேலுவின் குரூப்பிற்குள் வரமாட்டார்கள். படத்திலும் விவேக் இருந்தால் அவர் குரூப் நடிகர்கள் தான் அவருடன் இருப்பார்கள்.

இப்படி போய்க் கொண்டிருந்த நேரத்தில் திடீரென்று வடிவேலுவின் நடவடிக்கையில் மாற்றம் ஏற்பட்டது. தன்னை நம்பி இருக்கும் நடிகர்களுக்கு தீங்கு விளைவிக்க ஆரம்பித்தார் வடிவேலு. யாருக்கும் எந்த உதவிகளையும் இதுவரை செய்ததில்லையாம். ஒரு அவசர உதவி என்றாலும் அவர்களை உதாசீனப்படுத்தி விடுவாராம்.

இதனால் அவர் குரூப்பில் இருக்கும் அனைவரும் வடிவேலுவை விட்டு பிரிந்து வந்து விட்டனர். அதில் முத்துக்காளை, வெங்கல் ராவ், சிஸ்ஸர் மனோகர், பாவா லட்சுமணன், போண்டா மணி ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள். அதில் போண்டா மணி மிகவும் இக்கட்டான சூழ்நிலையில் இருந்தும் கூட ஒரு வீடியோவை பதிவு செய்து வடிவேலுவுக்கு அனுப்பியிருந்தார். அதை பார்த்து விட்டு உதவி செய்கிறேன் என்று சொன்ன வடிவேலு இதுவரை எதுவும் செய்யவில்லை.

bava1

bava1

இந்த நிலையில் பாவா லட்சுமணனும் சுகர் அதிகரித்து ஒரு கட்டை விரல் எடுக்கப்பட்டு மிகவும் மோசமான நிலையில் இருக்கிறார். அவரிடம் வடிவேலுவை பற்றி கேட்டபோது ஐய்யோ அவரை பற்றி கேட்காதீங்க என்று பயந்தார். ஏனெனில் ஒரு பேட்டியில் வடிவேலு ‘என்னை பகைச்சுக்கிட்டவர்களில் பாதிபேர் செத்துப் போயிட்டான், இன்னும் சிலர் சுகர் வந்து விரலை எடுத்துக்கிட்டு இருக்கான்’ என்று கூறியிருந்தார்.

இதையும் படிங்க : இதுக்குதான்யா புது டைரக்டருக்கு படம் பண்றது இல்ல! இயக்குனரால் கடுப்பான வாலி…

அதனால் அதை கேட்டு பயந்து போய் எங்கே நமக்கும் ஏதாவது ஆகிவிடுமோ என்ற பயத்தில் வடிவேலுவை பற்றி ஒன்றுமே சொல்லவில்லை. ஆனால் வா மா மின்னல் என்ற அந்த சீனில் எனக்கு கிடைத்து அங்கீகாரம் வடிவேலுவால் தான், அதை நான் மறக்க மாட்டேன் என்று பாவா லட்சுமணன் கூறினார்.

Next Story