கேன்சர் இருப்பது தெரியாமலே இறந்த பவதாரிணி!... மகளை காப்பாற்ற கடைசி வரை போராடிய இளையராஜா…

by Akhilan |   ( Updated:2024-01-26 04:44:25  )
கேன்சர் இருப்பது தெரியாமலே இறந்த பவதாரிணி!... மகளை காப்பாற்ற கடைசி வரை போராடிய இளையராஜா…
X

Bavatharani: இளையராஜாவின் ஒரே மகளும், பாடகியுமான பவதாரிணி நேற்று இரவு திடீரென மரணம் அடைந்தார். அவருக்கு கல்லீரல் புற்றுநோய் இருந்ததும், அதற்கு அவர் தீவிர சிகிச்சையில் ஸ்ரீலங்காவில் அனுமதிக்கப்பட்டு இருந்தார். அதற்கு அவர் குடும்பமும் உழைத்தது பலரை ஆச்சரியப்பட வைக்கிறது.

நடிகை பவதாரிணிக்கு முதலில் வயிறு வலி ஏற்பட்டதாம். அப்போதே அவருக்கு நான்காம் கட்ட புற்றுநோய் என்பதை மருத்துவர்கள் கண்டறிகின்றனர். அதுவும் கல்லீரலில் என்பதை பவதாரிணிக்கு அந்த குடும்பத்தினர் யாருமே சொல்லாமல் காப்பாற்றி வந்து இருக்கின்றனர். சாதாரண வலி என்றே சமாளித்தனராம். ஒருகட்டத்தில் அவரை 10 முதல் 15 நாட்கள் வரை தான் உயிருடன் வைக்க முடியும் என அதிர்ச்சி கொடுக்கின்றனர்.

இதையும் படிங்க: இது வெறும் டிரெய்லர் தாம்மா…. மெயின் பிக்சரைப் பார்த்துடாதீங்க… நொந்துடுவீங்க..

இதில் இளையராஜாவே நிலை குழைந்து விட்டார். உடனே தன் மகளை காப்பாற்ற ஸ்ரீலங்காவிற்கு அழைத்து சென்று அங்கு இருந்த பெரிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தொடர் சிகிச்சையில் மகளுடனே இருந்து வந்தாராம் இளையராஜா. சிகிச்சைக்கு சென்று திரும்பும் போது இளையராஜாவின் முகமே வாடி யாரிடமும் பேசாமல் அமர்ந்து இருந்தவரை பல சமயங்களில் கார்த்திக் ராஜா தான் கூட இருந்து தேற்றி இருக்கிறார்.

அக்காவின் பாசம் கொண்டு யுவன் ஷங்கர் ராஜா, அவரின் உடல் நிலைக்காக சென்னையில் தங்கி இருந்து இருக்கிறார். ஸ்ரீலங்கா சிகிச்சைக்கு செல்ல இருந்ததால் சரியாகிவிடுவார் என்ற நம்பிக்கையில் வெங்கட் பிரபுவுடன் லண்டனுக்கு கோட் பட இசையமைப்பு வேலைக்காக சமீபத்தில் தான் கிளம்பி சென்று இருக்கிறார். இந்நிலையில் தான் பவதாரிணி இறப்பு ஏற்பட யுவன் வர முடியாத நிலையே இருக்கிறது.

இதையும் படிங்க: வில்லன் பில்டப் வெறித்தனமா இருக்கு!.. கங்குவா புதிய போஸ்டர் அப்டேட் இதோ!..

Next Story