புதுசெல்லாம் இல்லங்க.. பழைய படத்தை மிக்ஸியில் அரைச்சா கோட்… வெளுத்துவிட்ட பயில்வான் ரங்கநாதன்
Goat: தமிழ் சினிமாவில் பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கி வெளியாகி இருக்கும் திரைப்படம் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம். இப்படத்தினை திரை விமர்சனத்தை விமர்சகர் பயில்வான் ரங்கநாதன் பிரித்து மேய்ந்து இருக்கிறார்.
இதுகுறித்து பயில்வான் ரங்கநாதன் கூறும்போது, தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம். வெங்கட் பிரபு இயக்கி இருக்கும் இப்படத்தில் விஜய், பிரசாந்த், அஜ்மல், பிரபுதேவா, சினேகா, லைலா உள்ளிட்ட முன்னணி பிரபலங்கள் நடித்துள்ளனர். யுவன் ஷங்கர் ராஜா இசையமைப்பு செய்து இருக்கிறார். சித்தார்த் நோனி இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்து இருக்கிறார்.
இதையும் படிங்க: ரியல் மங்காத்தா ஆடுனது நம்ம வெங்கட் பிரபுதான்… கோட் படத்தின் Honest Review
புதிய படம் எல்லாம் இல்லை. 1990களில் வெளியான பிரபல படங்களின் கலவையாகவே இப்படத்தை கொடுத்திருக்கிறார். காந்தியாக விஜய் நடித்திருக்கிறார். இவரின் நெருங்கிய நண்பர்கள் தான் பிரபுதேவா, பிரசாந்த் மற்றும் அஜ்மல்.
விஜயின் மனைவிதான் சினேகா. பிரசாந்தின் மனைவி லைலா. இரண்டாவதாக சினேகா கர்ப்பமாக இருக்கும் போது டாக்டர் ஆனா லைலாவை சந்திக்கிறார். அப்போ தன்னுடைய கணவர் காந்தி மீது சந்தேகம் இருப்பதாக சினேகா கூட குடும்பத்தை அழைத்துக் கொண்டு தாய்லாந்து செல்கிறார்.
அங்குதான் அவருடைய முதல் மகனை தொலைத்து விடுகிறார். இதற்கு காரணம் ஃபிளாஷ்பேக்கில் கூறப்படுகிறது. ஒரு குண்டு வெடிப்பு சம்பவத்தில் மோகனின் குடும்பத்தை கொன்றுவிடுகின்றனர். அதற்குத்தான் மோகன் பலி வாங்குகிறார். விஜயின் மகனை தூக்கி வந்து பாசத்துடன் வளர்க்கிறார்.
இதையும் படிங்க: ஐஸ்வர்யா ரஜினிகாந்த், லோகேஷ் கனகராஜ் போல நான் இல்ல.. ஓபனாக பேசிட்டாரே!…
விஜய் தன் அப்பா என தெரிந்து கொண்டு அவரை பழிவாங்க துடிக்கிறார். இப்படத்தில் விஜய் முழுமையாக நடித்துஇருக்கிறார். வில்லனும் அவரே கதாநாயகனும் அவரே. ஒரு பாடலில் திரிஷா குத்தாட்டம் போடுகிறார். சிவகார்த்திகேயன் ஒரு கேமியோ ரோலில் நடித்து இருப்பார்,
அண்ணன் பெரிய வேலைக்கு போறாரு இந்த சின்ன வேலைய நான் பார்த்துப்பேன் என அரசியல் டயலாக்கையும் வைத்திருக்கின்றனர். சிவகார்த்திகேயனுக்கு இது பெரிய பில்டப்பாகவும் அமையும். சினேகா குடும்பபாங்காக நடித்திருக்கிறார். காட்சியை குறைத்து படத்தின் நீளத்தையும் குறைத்திருந்தால் நிம்மதியாக இருந்துஇருக்கும்.