குடும்பத்தையே கவனிக்காத விஜய், நாட்டை எப்படி கவனிப்பார்? விளாசும் பிரபலம்
ஆன்மிகத்தையும் கம்யூனிசத்தையும் கலந்து கொடி தயாரித்து இருக்கிறார் விஜய். சிவப்பு, மஞ்சள், போர் யானை, 28 நட்சத்திரம், வட்டம் என்று இதில் இடம்பெற்றுள்ளது என்று பிரபல யூடியூபர் பயில்வான் ரங்கநாதன் தனது கருத்துகளை விலாவாரியாக சொல்கிறார். இதுபற்றி அவர் மேலும் என்ன சொல்கிறார்னு பார்ப்போம்.
வெளியில் கொடியேற்ற அனுமதி இல்லாததால் வீட்டிற்குள்ளேயே கொடி ஏற்றினார் விஜய். இந்த விழாவில் பேசி முடித்ததும் விஜய் இரண்டாவதாக வந்து பெற்றோருக்கு நன்றி சொல்ல மறந்துட்டேன்னு திரும்ப நினைவு படுத்திக் கூறினார்.
ஆனால் விஜய் மேடைக்குச் செல்லும்போது அவரது தாய் ஷோபா சந்திரசேகர் கையைக் காட்டி வான்னு கூப்பிட்டாரு. அதை மறுத்துவிட்டுப் போய்விட்டார். நல்ல அரசியல் தலைவர்னா முதலில் பெற்றோர் காலில் விழுந்து ஆசி வாங்குவார். தாய் தந்தையர்கள் தான் நம்மைப் பெற்றவர்கள். அதனால் அவர்கள் காலில் விழுந்து விஜய் முதலில் ஆசிர்வாதம் வாங்கி இருந்தால் பாராட்டலாம்.
விஜய் மனைவி சங்கீதா லண்டனில் இருக்கிறாராம். மகன் ஜேசன் சஞ்சய் வரவில்லை. மகள் திவ்யா வரவில்லை. மகன் இங்கு தான் கதை விவாதத்தில் இருக்கிறார். தன் தந்தை எடுக்கும் விழாவில் மகன் கலந்துகொள்ளவில்லை. மகள், மனைவி கலந்து கொள்ளவில்லை என்றால் குடும்பத்தில் இன்னும் குழப்பம் நீடிக்கிறது.
இதையும் படிங்க... விஜய் கட்சி பாடலை விவேக் எழுதக் காரணம் .. இத்தனை விஷயங்கள் இருக்கா?
குடும்பத்தில் மனைவி, குழந்தைகளுடன் வாழத் தெரியாத ஒரு நடிகர் எப்படி என்ற கேள்வியும் எழுகிறது என்கிறார் பயில்வான். இதைப் பார்க்கும்போது குடும்பத்தை சரிவர கவனிக்காத விஜய் நாட்டை எப்படி கவனிக்கப் போகிறார் என்றே பயில்வான் மறைமுகமாக சொல்கிறார் என்று எண்ணத் தோன்றுகிறது.
விஜய் யாரை எதிர்க்கப் போகிறார். விலைவாசி உயர்வைப் பற்றிப் பேசவில்லை. கொள்கை, கோட்பாடுகளைப் பற்றியும் பேசவில்லை. கட்சிக் கொடி பற்றியும் கூறாமல் மாநாட்டில் தான் சொல்வேன் என்றார் விஜய். அதுவரைக்கும் வாயைப் பொத்திக் கொண்டு இருக்க என்ன காரணம்? இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.