ராதிகாவே அட்ஜெஸ்ட்மெண்டுக்கு அனுப்புன செய்தி தெரியுமா? பயில்வான் ரெங்கநாதன் காட்டம்
Actress Radhika: சமீபகாலமாக சினிமா துறையை ஒரு புரட்டு புரட்டி போட்டிருக்கிறது இந்த ஹேமா கமிட்டி. மலையாள சினிமாவில் ஒரு பெரிய பூகம்பமாக கிளம்பி இருக்கும் ஹேமா கமிட்டி தமிழ் சினிமாவிலும் மற்ற பிற சினிமாக்களிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
மலையாளத்தில் பாலியல் கொடுமைகள் நடப்பதாக நடிகைகள் அடுத்தடுத்த புகார்களை கொடுத்த வண்ணம் இருக்கின்றனர். அதில் பல முன்னணி நடிகர்கள் மீதும் புகார்கள் கொடுக்கப்பட்டிருக்கின்றன. யாரும் எதிர்பாராத நடிகர்களின் பெயர்கள் இந்த பட்டியலில் இருப்பது தான் மிகப்பெரிய ஆச்சரியம்.
இதையும் படிங்க: தமிழ்நாட்டில் இவ்வளவுதானா?!… அதிர்ச்சி கொடுக்கும் கோட் படத்தின் வசூல்!..
ஒரு சில நடிகர்கள் மீது எப்ஐஆரும் போடப்பட்டிருக்கிறது. இதைப்பற்றி பிரபல மூத்த பத்திரிகையாளரும் நடிகருமான பயில்வான் ரங்கநாதன் கூறும்போது எஃப்ஐஆர் போட்டாலும் அந்த கேஸ் நிற்கப் போவதில்லை. குறிப்பிட்ட நடிகர்கள் மீது விசாரிப்பார்கள். அதன் பிறகு ஜாமீன் எடுத்து வெளியே வரத்தான் போகிறார்கள்.
இந்த ஹேமா கமிட்டியால் என்ன பயன் என்றவாறு பேசி இருக்கிறார். அது மட்டும் அல்லாமல் எப்பவோ நடந்ததை வைத்து இப்பொழுது பேசிக் கொண்டிருப்பதில் ஒரு பயனும் இல்லை. அனுபவிக்க வேண்டியதை எல்லாம் அனுபவித்து விட்டு இப்பொழுது குத்துது குடையுது என்று சொன்னால் என்ன பிரயோஜனம் என்றும் கேள்வி எழுப்பி இருக்கிறார் பயில்வான் ரங்கநாதன்.
இதையும் படிங்க: சினேகா ரோலில் முதலில் செலக்ட் ஆனவர் நயன்! படத்தை பார்த்துவிட்டு என்ன சொன்னார் தெரியுமா?
அது மட்டுமல்லாமல் ராதிகா கூறிய கருத்துக்கும் பதிலடி கொடுத்திருக்கிறார் பயில்வான் ரங்கநாதன். அதாவது ராதிகா பேசும் போதெல்லாம் பெரிய நடிகர்கள் வாயை திறக்கவே இல்லை. நாட்டை ஆளும் ஒரு சில பேரும் இதைப் பற்றி பேசவே தயங்குகிறார்கள் என விஜய்யை மறைமுகமாக தாக்கியவாறு ராதிகா பேசியிருந்தாரே. இதைப் பற்றி உங்கள் கருத்து என்ன என்று பயில்வான் ரங்கநாதனிடம் கேட்டபோது,
அதற்கு பயில்வான் ரங்கநாதன் அந்த நடிகர்கள் எப்படி வாயை திறப்பார்கள்? ராதிகாவிடமே நான் ஒரு கேள்வியை கேட்கிறேன். வெளிநாட்டில் ஒருவரை நீங்கள் திருமணம் செய்து கொண்டீர்கள் அல்லவா? அவர் இப்ப எங்கே இருக்கிறார்? என்ன செய்கிறார்? இப்படி கேட்டா பதில் சொல்லுவாங்களா ராதிகா?
இதையும் படிங்க: இந்திய சினிமாவிலேயே மிகச்சிறந்த நடிகை! ‘சூர்யா 44’ல் களமிறங்க ரெடியாகிட்டாங்க
அது மட்டுமல்ல பிரதாப் போர்த்தனுக்கும் உங்களுக்கும் அப்படி என்னதான் பிரச்சனை? இப்படி கேட்டாலும் பதில் சொல்லுவாங்களா? சொல்ல முடியாதுல. இன்னொரு விஷயமும் சொல்றேன். இது பத்திரிகைகளில் வெளிவந்த செய்தி. ஆதாரம் இருக்கு.
ராதிகாவின் டிவி தொடர் தயாரிப்பு நிறுவனத்தில் நடந்தது. இரவு 11 மணி ஷூட்டிங் வரை ராதிகா கலந்து கொண்டிருக்கிறார். அப்போ 11 மணி ஆகிவிட்டது. ராதிகா சம்பந்தப்பட்ட காட்சிகளை சீக்கிரமாக முடித்துவிட்டு அனுப்ப வேண்டும் என துரிதப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.
அந்த சமயத்தில் ஒரு நடிகை ராதிகாவிடம் வந்து 'மேடம் இந்த மாதிரி டைரக்டர் என கூப்பிடுறாரு. பத்து நிமிஷம் தான். மேக்கப் ரூமுக்கு வந்துட்டு அட்ஜஸ்ட்மென்ட் பண்ணிட்டு போ அப்படின்னு சொல்றாரு. எனக்கு என்ன பண்றதுனே தெரியல ’என சொன்னாராம்.
அதற்கு ராதிகா ‘என்ன பண்றதுன்னு தெரியலையா? அத பத்தி எல்லாம் தெரிஞ்சு தானே இந்த பீல்டுக்கு வந்திருக்க. இஷ்டம் இல்லையா போய்கிட்டே இரு. நாளையிலிருந்து வராத. வேற ஆள பாத்துக்கலாம்’ என சொன்னாராம் ராதிகா. இதைப்பற்றி அவர் கிட்ட கேளுங்க. இல்லைன்னு சொல்ல சொல்லுங்க பார்ப்போம் என பயில்வான் ரங்கநாதன் கூறியிருக்கிறார்.