‘இந்தியன் 2’ படம் நல்லா இல்லைங்க! வம்பிழுத்த ஜெகனை வெளுத்து வாங்கிய பயில்வான்
பல வருடங்களாக தன் யூடியூப் சேனல் மூலமாக வெளியாகும் புதிய புதிய படங்களை விமர்சித்து வருபவர் நடிகரும் மூத்த பத்திரிக்கையாளருமான பயில்வான் ரெங்கநாதன். 80, 90களில் எல்லாம் பல படங்களில் பிரதான வில்லனே பயில்வான் ரெங்கநாதன்தான். பாக்யராஜ், ராம நாராயணன்,கே.எஸ்.ரவிக்குமார் இவர்கள் இயக்கிய பல படங்களில் பயில்வானை ரெங்கநாதனை நாம் காண முடியும்.
ஆனால் இப்போது சினிமாவில் நடிப்பதை நிறுத்திவிட்டு தனது சேனல் மூலம் படங்களை விமர்சித்து வருகிறார். இதனால் பல பேரின் கோபத்திற்கும் ஆளாகியிருக்கிறார் பயில்வான். இருந்தாலும் அது என் கடமை, உரிமை என இன்னும் அதை தொடர்ந்து கொண்டு தான் வருகிறார். இடையிடையே பல நடிகைகளின் அந்தரங்க விஷயங்களை பற்றி தனது சேனல் மூலம் கூறி வந்த பயில்வானுக்கு எதிராக பல எதிர்ப்புகள் வலுத்தன.
அதை மட்டும் இப்போது குறைத்துக்கொண்டிருக்கிறார். இந்த நிலையில் இன்று நகுல் மற்றும் சாந்தனு ஆகியோர் நடிப்பில் தயாராகியிருக்கும் வாஸ்கோடா காமா படத்தின் இசை வெளியீட்டு விழா நடந்தது. அந்தப் படத்தில் பயில்வானும் நடித்திருக்கிறாராம். அதனால் அவரும் இந்த விழாவிற்கு வந்திருந்தார். கூடவே நடிகர் ஜெகனும் வந்திருந்தார்.
ஜெகன் பேசும் போது பயில்வான் விமர்சனத்திற்கும் மொத்தமாக யூடியூப்பர்களை பற்றியும் கடுமையாக பேசியிருந்தாராம். இதற்கு பதிலளிக்கும் விதமாக பேசிய பயில்வான் ‘இந்தியன் 2 படத்தை பற்றி விமர்சிக்கும் போது ஜெகனை பற்றி நல்ல விதமாகத்தான் கூறியிருந்தேன். அதை இப்போது வாபஸ் வாங்கிக் கொள்கிறேன்’ என கூறினார்.
ஒரு படத்தை நல்லா இல்லைனா நல்லா இல்லைனுதான் சொல்ல முடியும். ஆமாங்க. இந்தியன் 2 படம் நல்லா இல்லை. இப்பொழுது பேசிய பல பேரும் என்னை பார்த்து ‘ நீங்கள்தான் இந்தப் படத்தை நல்ல நிலைமைக்கு கொண்டு போக வேண்டும் என சொல்கிறார்கள்.’ இதற்கு விதிவிலக்காக பேசியது ஜெகன். இப்போதுதான் தெரிகிறது. ஏன் இன்னும் அவர் அடுத்த கட்டத்திற்கு போகலைனு?
அதனால் ஜெகன் மேடை நாகரீகம் கருதி இனி பேசுங்கள். அதுதான் நல்லது. விமர்சனம் செய்கிறவர்களை தயவு செய்து திட்டாதீர்கள் என நடிகர் ஜெகனுக்கு அறிவுரைகளை வழங்கினார் பயில்வான் ரெங்கநாதன்.