நம்ப வைத்து ஏமாற்றினாரா கமல்ஹாசன்.?! பிக் பாஸ் பிரபலத்தால் ஏற்பட்ட சர்ச்சை… பின்னணி என்ன.?!

Published on: August 15, 2022
---Advertisement---

விஜய் டிவியில் ஒளிபரப்பான கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியில்  ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த சீசன் என்றால் அது சீசன் 3 தான். அதில் க்வின் , முகன் ராவ், தர்ஷன், மாஸ்டர் சாண்டி , லாஸ்லியா என அந்த குரூப் ரசிகர்களை மிகவும், கவர்ந்துவிட்டது.

அதில் இறுதியில், தர்ஷன் 3வது வெற்றியாளராக வெளியேறினார். அப்போது, அந்த நிகழ்வில், தொகுப்பாளர் கமல்ஹாசன், தர்ஷனுக்கு சினிமாவில் நான் வாய்ப்பு  தருகிறேன் என உறுதியளித்தார்.

உடனே , இந்தியன் 2வில் தர்ஷன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்றெல்லம் செய்திகள் வெளியாகின. அதன் பின்னர் இந்தியன் 2வும் சிக்கலில் வந்துவிட்டது. அதன் பின்னர் விக்ரம் படம் ரிலீஸ் ஆகிவிட்டது. அதில் தர்ஷன் இல்லை.

இதையும் படியுங்களேன் – எனக்கு நடந்த அந்த மாதிரியான சம்பவம்… வெளிப்படையாக கூறிய சாய் பல்லவி.! அதிர்ந்து போன ரசிகர்கள்…

இந்தியன் 2 விரைவில் ஆரம்பிக்க உள்ளது. அதிலும் தர்ஷன் பெயர் இல்லை. இதனை பார்த்த நெட்டிசன்கள் , கமல்ஹாசன் ஏமாற்றியது போல கூறிவிட்டனர். இதனை பார்த்த சினிமாவாசிகள், இப்படி மேடையில் பொய்யான அறிவிப்பு கூறி புகழ் வாங்க வேண்டிய சூழ்நிலை கமலுக்கு வேண்டியது இல்லை. அவருக்கான புகழ் ஆண்டாண்டு காலம் இருக்கிறது.

இது தர்ஷன் தரப்பில் இருந்து சரியான பதில் வந்திருக்காது. அல்லது வேறு ஏதேனும் சம்பவம் நடந்திருக்கலாம் என கூறுகிறார்கள் விவரம் அறிந்தவர்கள்.

Manikandan

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.