மீண்டும் ரசிகர்களை ஏமாற்றும் நெல்சன்.! தளபதி ரசிகர்கள்கிட்ட இந்த வேலை பண்ணாதீங்கனே.!
விஜய் நடிப்பில் வரும் ஏப்ரல் மாதம் ரிலீசாக உள்ள திரைப்படம் பீஸ்ட். இந்த படத்தை சன் பிக்ச்சர்ஸ் தயாரித்துள்ளது. பூஜா ஹெக்டே, செல்வராகவன், ரெடின் கிங்ஸ்லி என பலர் நடித்துள்ளனர். இந்த திரைப்படத்தை டாக்டர் பட இயக்குனர் நெல்சன் இயக்குகிறார்.
நெல்சன் இயக்கிய டாக்டர் படத்தில் சிவகார்த்திகேயன் எழுதி அனிருத் பாடிய செல்லம்மா பாடல் பட்டிதொட்டி எங்கும் சூப்பர் ஹிட்டானது. இந்த பாடல் கண்டிப்பாக படத்தில் வரும் என எதிர்பார்த்த ரசிகர்களுக்கு பெருத்த ஏமாற்றமே மிஞ்சியது. படம் முடிந்த பிறகு இந்த பாடல் திரையிடப்பட்டது.
அதே போல தளபதியின் பீஸ்ட் படத்திலும், சிவகார்த்திகேயன் எழுதி அனிருத் பாடியுள்ள திரைப்படம் தான் அரபிக் குத்து. இந்த பாடலும் செல்லம்மா பாடல் போல செட் அமைத்து படமாக்கப்பட்டுள்ளது. டாக்டர் படம் போலவே இந்த பாடலும் படத்தோடு வராது என்பது போல தகவல் வெளியாகியுள்ளது.
இதையும் படியுங்களேன் - இறுக்கி பிடித்த கெளதம் மேனன்.! உதறி சென்ற ஹாரிஸ் ஜெயராஜ்.! பின்னணி எனன.?
படத்தின் கதைப்படி, ஷாப்பிங் மாலில் உள்ள தீவிரவாத கும்பலை பிடிப்பது போல இருக்குமாம். அந்த நேரத்தில் அரபிக் குத்து வந்தால் நன்றாக இருக்காது என்பதால், டாக்டர் படம் போல அரபிக் குத்து பாடலை இறுதியில் போட்டுவிடலாமென படக்குழு யோசித்து வருகிறதாம்.
இதனை அறிந்த ரசிகர்கள் அரபிக் குத்து பாடலை படத்தில் இணைத்துவிடுங்கள் என கோரிக்கை வைத்து வருகின்றனர்.