பீஸ்ட் படத்திற்கு தடை.! கடும் கொந்தளிப்பில் ரசிகர்கள்.!

தளபதி விஜயின் பீஸ்ட் திரைப்படம் வரும் வாரம் புதன் கிழமை வெளியாக உள்ளது இந்த படத்தை, நெல்சன் இயக்கியுள்ளார். சன் பிக்ச்சர்ஸ் தயாரித்துள்ள்ளது. ஆக்சன் திரைப்படமாக இப்படம் உருவாகியுள்ளது.
பீஸ்ட் படத்திற்கு அடுத்த நாள் பிரமாண்டமாக வெளியாகவுள்ள கே.ஜி.எப் திரைப்படமும் ரிலீஸுக்கு ரெடியாக உள்ளது. கிட்டத்தட்ட உலகமெங்கும் பல நாடுகளில் இந்த இரு படங்களும் ரிலீஸ் ஆகும் என எதிர்பார்த்து காத்திருந்த நிலையில், தற்போது ஓர் ஷாக்கிங் செய்தி வெளியாகியுள்ளது.
அதாவது குவைத் நாட்டில் பீஸ்ட் திரைப்படம் திரையிடுவதற்கு அந்த நாடு தடை விதித்துள்ளதாம். இந்த தடை எதற்கு என்றால், பீஸ்ட் திரைப்படத்தில் பெரும்பாலும் பாகிஸ்தான் தீவிரவாதிகள், அதிகமான சண்டை காட்சிகள் இருக்கிறதாம்.

arabikuthu in beast
இதையும் படியுங்களன் - இந்த படத்தின் அட்ட காப்பி தான் அந்த புது படமா.?! நயன்தாரா காதலருக்கு வந்த சோதனை.!
அதன் காரணமாக தான் பீஸ்ட் திரைப்படத்தை திரையிட அந்த நாடு தடை விதித்துள்ளாதாம். இதே போல தான் அண்மையில் ரிலீஸ் ஆன, விஷ்ணு விஷாலின் FIR திரைப்படமும் தீவிரவாதம் சம்பந்தப்பட்ட காட்சிகள் இருப்பதாக கூறி அப்படத்திற்கு தடை விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.