More
Categories: Cinema News latest news

பீஸ்ட் கவுண்ட்டவுன் ஸ்டார்ட்!.. ஃபர்ஸ்ட் சிங்கிள் ரிலீஸ் எப்போது தெரியுமா?…

மாஸ்டர் படத்திற்கு பின் விஜய் நடித்துள்ள திரைப்படம் பீஸ்ட். சன் பிக்சர்ஸ் தயாரித்து வரும் இப்படத்தை டாக்டர் பட இயக்குனர் நெல்சன் இயக்கி வருகிறார். இப்படத்தில் முக்கிய வில்லனாக இயக்குனர் செல்வராகவன் நடித்து வருகிறார். விஜய்க்கு ஜோடியாக நடிகை பூஜா ஹெக்டே நடித்துள்ளார்.டாக்டர் ஹிட்டுக்கு பின் நெல்சன் இப்படத்தை இயக்குவதால் இப்படத்தின் மீது எதிர்ப்பார்ப்பு எகிறியுள்ளது.

சமீபத்தில் விஜய் சம்பந்தப்பட்ட காட்சிகள் எடுத்து முடிக்கப்பட்டது. விஜயை நெல்சன் கட்டிப்பிடித்து வழியனுப்பிய புகைப்படம் வெளியாகி சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகியது. தற்போது வேறு சில காட்சிகளை நெல்சன் படமாக்கி வருகிறார். இன்னும் ஒரு வாரத்தில் படப்பிடிப்பு முடிவடையவுள்ளது..

Advertising
Advertising

இந்நிலையில், இப்படத்தில் இடம் பெற்ற ஒரு பாடல் வீடியோவை ஜனவரி 1ம் தேதி புத்தாண்டு அன்று வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

எனவே, விஜய் ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.

Published by
சிவா