தனக்கு உதவி செய்தவருக்கே ஆப்பு வாய்த்த பீஸ்ட் இயக்குனர் நெல்சன்.! நல்லதுக்கே காலமில்லை.!
டாக்டர் படத்தின் வெற்றியை தொடர்ந்து இயக்குனர் நெல்சன் அடுத்ததாக தளபதி விஜய்யை நாயகனாக வைத்து பீஸ்ட் திரைப்படத்தை இயக்கி உள்ளார். இந்த படத்தை சன் பிக்சர்ஸ் பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறது. பூஜா ஹெக்டே நாயகியாக நடித்து வருகிறார். இயக்குனர் செல்வராகவன் வில்லனாக நடித்துள்ளார். இந்த படத்தின் ஷூட்டிங் முழுவதும் முடிந்து விட்டது.
பீஸ்ட் படத்தின் அடுத்த கட்ட வேலைகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படம் ஏப்ரல் மாதம் திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இப்படத்தின் படப்பிடிப்பு செலவு நெல்சன் கூறியதை விட அதிகமாக சென்று விட்டதாம். இதனால் சன் பிக்சர்ஸ் தரப்பு நெல்சன் மீது அதிருப்தியில் உள்ளதாம். ஆனால், நெல்சன் அந்த பழியை தூக்கி படத்தின் ப்ரொடெக்சன் மேனேஜர் உதயகுமார் மீது வைத்து விட்டாராம்.
அதாவது, ' நான் சரியாகத்தான் பட்ஜெட் போட்டேன். ஆனால், புரோடக்சன் மேனேஜர் உதயகுமார் தரப்பில் பிரச்சனை வந்து விட்டது.' என கூறி நழுவி கொண்டாராம்.
இயக்குனர் நெல்சன் படப்பிடிப்பு தளங்களுக்கு அவ்வபோது லேட்டாக வருவாராம். கதாநாயகன் விஜய் வந்தபிறகு கூட நெல்சன் சிலநேரம் படப்பிடிப்பிற்கு வருவாராம். ஆனால், இந்த தகவலை விஜய்யிடம் கொண்டு சேர்க்காமல் ப்ரொடெக்சன் மேனேஜர் உதயகுமார் நெல்சனை காப்பாற்றி வந்துள்ளார். ஆனால், அந்த நன்றி கூட இல்லாமல் நெல்சன் பட்ஜெட் பழியைத் தூக்கி உதயகுமார் மீது வீசியுள்ளதாக கோடம்பாக்கத்தில் கிசுகிசுக்கப்படுகிறது.