இந்தா ஆரம்பிச்சிட்டாங்களே.! பீஸ்ட் முதல் நாள் டிக்கெட் விலை 1500 மட்டுமே.! எங்கு தெரியுமா?

முன்பெல்லாம் முன்னணி நடிகர்களின் படமென்றால் முதல் ஒரு வாரத்திற்காவது டிக்கெட் கட்டணம் தாறுமாறாக இருக்கும். ஏனென்றால் அப்போது தியேட்டர்களின் எண்ணிக்கை குறைவு, அதனால், குறிப்பிட்ட அளவே திரையிட படுவதால் தங்கள் ஆதர்சன நாயகனை பார்க்க வேண்டும் என முண்டியடித்துக்கொண்டு வந்துவிடுவர்.
ஆனால், தற்போது நிலைமை கொஞ்சம் நார்மலாகி உள்ளது. ஆம், தற்போது திரையரங்கின் எண்ணிக்கை அதிகமாகியுள்ளது. பெரிய படங்களை பெரும்பாலும் அனைத்து தியேட்டர்களும் திரையிடுகின்றனர். மேலும் முக்கால்வாசி ஆன்லைன் டிக்கெட் விற்பனை என்பதால் டிக்கெட் விலை வெளிப்படையாக தெரிந்துவிடுகிறது.
வரும் வாரம் புதன் கிழமை வெளியாக உள்ள தளபதி விஜயின் திரைப்படம் பீஸ்ட். பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கோலாகலமாக வெளியாக உள்ளது. இந்த திரைப்படத்தை இயக்குனர் நெல்சன் , ஆக்சன் கலந்த காமெடி திரைப்படமாக இயக்கியுள்ளார்.
இந்த திரைப்படத்திற்கும் முதல் நாள் முதல் காட்சியை பார்த்துவிட வேண்டும் என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். தற்போது இணையத்தில் பீஸ்ட் திரைப்படத்தின் அமெரிக்க ஆன்லைன் டிக்கெட் முன்பதிவு தொடங்கியுள்ளது.
இதையும் படியுங்களேன் - கேப்டன் அதில் இருக்காரா இல்லையா.?! ‘அந்த’ உண்மையை உளறிய இயக்குனர்.!
அங்கு இப்பலாம் ஒரு நாள் முன்னதாக ஏப்ரல் 12ஆம் தேதி மாலையே வெளியாகிவிடும். அங்கு வெளியான இந்த டிக்கெட் விலை 20 அமெரிக்க டாலராக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாம். அதாவது இந்திய மதிப்பில் சுமார் 1500 ரூபாய் என அறியப்பட்டுள்ளது. அங்கும் டிக்கெட் முன்பதிவு கோலாகலமாக விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.