வெளியானது பீஸ்ட் முதல் பாடல்.! படக்குழு மீது மிகுந்த அப்செட்டில் விஜய் ரசிகர்கள்.!

தளபதி விஜய் நடிப்பில் தற்போது ரிலீசுக்கு ரெடியாக உள்ள திரைப்படம் பீஸ்ட். வரும் ஏப்ரல் மாதம் 14ஆம் தேதி திரைக்கு வர உள்ளதாக கூறப்படுகிறது. ஏறக்குறைய அதுதான் உண்மையும் கூட. விரைவில் அதற்கான அறிவிப்பு வெளியாகிவிடும்.
இப்படத்தின் ரிலீஸ் நெருங்கி வருவதால், இப்படத்தில் இருந்து அடுத்தடுத்த அப்டேட்களை வெளியிட படக்குழு முடிவு செய்து முதல் பாடலை இன்று மாலை 6 மணிக்கு வெளியிட்டுவிட்டது. வெளியிட்டு 1 மணி நேரத்திற்குள்ளாகவே அரை மணி நேரத்தில் 2 மில்லியன் பார்வையாளர்களை கடந்துவிட்டது.
இப்படத்தின் ப்ரோமோஷன் வீடியோ வெளியானது. அதில் அனிருத், இயக்குனர் நெல்சன், சிவகார்த்திகேயன் இருந்தனர். அரபிக் குத்து எனும் இந்த பாடலை சிவகார்த்திகேயன் தான் எழுதியுள்ளார்.
இதையும் படியுங்கள் - நடிச்சா ஹீரோதான்.! அடுத்தடுத்து அட்டகாசம்.! விண்ணை முட்டும் சூரியின் வளர்ச்சி.!
அந்த ப்ரோமோ விடியோவே ரசிகர்களை மிகவும் கவர்ந்தது. அந்த வீடியோ முடிவில் மூவரையும் விஜய் வீட்டிற்கு பாடலை முடித்துவிட்டு கொண்டு வாருங்கள் என கூறுவார். அதனால், ரசிகர்கள் எப்படியும் இன்று விஜய் உடன் மூவரும் இருக்கும் ஒரு கலகலப்பான வீடியோ தொகுப்பு வெளியாகிவிடும் என நம்பி இருந்தனர். ஆனால் ரசிகர்களுக்கு அந்த எதிர்பார்ப்பு ஏமாற்றத்தை தான கொடுத்துள்ளது.
ஆனால், பாடல் ரசிகர்களை ஏமாற்றவில்லை. பாடல் ரசிகர்கள் எதிர்பார்த்தது போல ரசிக்கும் படி, ட்ரெண்ட் செட்டிங் பாடலாக அமைந்துள்ளது. கண்டிப்பாக இன்னும் சில மாதம் இந்த பாடல் தான் இணையத்தில் ட்ரெண்டிங் என்பதில் சந்தேகமில்லை.