டாக்டரை அடுத்து பீஸ்ட்... தெறி மாஸ் அப்டேட் கொடுத்து சிரிக்க வைத்த நெல்சன் டீம்...

by சிவா |
beast
X

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் விஜய் நடித்துள்ள திரைப்படம் பீஸ்ட். டாக்டர் படத்திற்கு பின் இப்படத்தை நெல்சன் இயக்கியுள்ளார். இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார்.

மாஸ்டர் படத்திற்கு பின் இப்படத்தில் விஜய் நடித்துள்ளதால் விஜய் ரசிகர்களிடையே இப்படத்திற்கு தாறுமாறான எதிர்பார்ப்பு இருக்கிறது.

இந்நிலையில், இப்படத்தின் முதல் பாடல் அதாவது ஃபர்ஸ்ட் சிங்கிள் பிப்ரவரி 14ம் தேதி வெளியாகும் என சன் பிக்சர்ஸ் அதிகாரப்பூர்வமாக அதிகரித்துள்ளது. இப்பாடலுக்கு அரபிக் குத்து என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. அனிருத் இசையமைப்பில் இப்பாடலை நடிகர் சிவகார்த்திகேயன் எழுதியுள்ளார்.

மாஸ்டர் படத்தில் செல்லம்மா செல்லாம்மா பாடலை உருவாக்குவதற்கு நெல்சன் படும் பாட்டை காமெடியாக சித்தரித்து உருவாக்கி ரசிகர்களை கவர்ந்தது போல், இந்த பாட்டுக்கும் ஒரு சுவாரஸ்யமான வீடியோவை உருவாக்கியுள்ளனர்.

பார்த்து என்ஜாய் பண்ணுங்க...

Next Story