விஜய்க்கு முன்னால் சூர்யாவா? சூர்யாவுக்கு முன்னால் விஜயா? மண்டையை பிய்த்துகொள்ளும் சன் பிக்ச்சர்ஸ்.!
தமிழ் முன்னணி தயாரிப்பு நிறுவனமான சன் பிக்ச்சர்ஸ் ஏறக்குறைய தமிழில் அனைத்து முன்னணி ஹீரோ படங்களையும் தயாரித்து வருகின்றனர். விஜய், சூர்யா, தனுஷ், விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன் என லிஸ்ட் பெரிதாக செல்கிறது.
இதில் அடுத்து ரிலீஸ்க்கு ரெடியாகி இருக்கும் திரைப்படம் எதற்கும் துணிந்தவன். இந்த படத்தில் சூர்யா நாயகனாக நடிக்க, பாண்டிராஜ் இயக்கிவருகிறார். இந்த படம் பிப்ரவரி 4ஆம் தேதி வெளியாகும் என ஏறிவிக்கப்பட்டுவிட்டது. ஆனால், இன்னும் இரவு நேர ஊரடங்கு, ஞாயிறு முழு ஊரடங்கு, பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை என கொரோனா கட்டுப்பாடுகள் செல்வதால் குறித்த நேரத்தில் படம் ரிலீஸ் ஆகுமா என தெரியவில்லை.
ஒரு வேளை படம் பிப்ரவரியில் ரிலீஸ் ஆகவில்லை என்றால் ஏப்ரல் தான் என்கின்றனர் விவரம் அறிந்தவர்கள். ஆனால், ஏப்ரலில் விஜயின் பீஸ்ட் புக் செய்து வைத்துள்ளது அதே சன் பிச்சர்ஸ் தான்.
அப்படி நடந்தால், முதலில் எதற்கும் துணிந்தவன் ரிலீஸ் செய்து பிறகு ஓரிரு மாதங்கள் கழித்து பீஸ்ட் வெளியாகுமா அல்லது பீஸ்ட் வெளியாகிவிட்டு , அதற்கடுத்து மே மாதம் எதற்கும் துணிந்தவன் ரிலீஸ் ஆகுமா என பொறுத்திருந்து பார்க்கலாம்.