பீஸ்ட் திருப்பாச்சி-2வா.?! வலிமை ரிசல்ட்ட பாத்துமா நீங்க திருத்தல.?!
விஜய் நடிப்பில் தற்போது ரிலீசுக்கு தயாராகியுள்ள திரைப்படம் பீஸ்ட். இந்த படத்தை இயக்குனர் நெல்சன் இயக்கி உள்ளார். சன் பிக்ச்சர்ஸ் இப்படத்தை தயாரித்து உள்ளது. பூஜா ஹெக்டே, செல்வராகவன் என பலர் இந்த படத்தில் நடித்து உள்ளனர்.
இப்படம் ஏப்ரல் மாதம் திரைக்கு வரவுள்ளது. ஏற்கனவே பீஸ்ட் முதல் பாடல் வெளியான நிலையில், அடுத்ததாக டீசர் வெளியாகும் என கூறப்படுகிறது. இப்படத்தில் விஜய் ராணுவ அதிகாரியாக நடிக்கிறார். ஒரு ஷாப்பிங் மாலை தீவிர கும்பலிடம் இருந்து காப்பாற்றுவது தான் கதை என கூறப்படுகிறது.
மேலும் தற்போது ஒரு தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்தின் இரண்டாம் பாதி தங்கை செண்டிமெண்ட் நிறைந்ததாக இருக்கும் என கூறப்படுகிறது. திருப்பாச்சி படம் போல தங்கச்சி செண்டிமெண்ட் இந்த படத்தில் இருக்கும் என கூறப்படுகிறது.
இதையும் படியுங்களேன் - எங்களுக்குள் நாங்க செய்துகொண்ட ஒப்பந்தம் இதுதான்.! விஜய் நண்பர் கூறிய ரகசிய தகவல்.!
இப்படித்தான் அஜித்தின் வலிமை திரைப்படம் முதல் பாதி ஆக்சன் நிறைந்ததாகவும், இரண்டாம் பாதி செண்டிமெண்ட் கொஞ்சம் அதிகமாக இருந்ததால், படம் கலவையான விமர்சனங்களை பெற்று எதிர்பார்த்த வசூலை பெறுமா என்பதே சந்தேகமாகியுள்ளது.
அதே போல சென்டிமென்டை இயக்குனர் நெல்சன் அதிகமாக தூவாமல் இருந்தாலே போதும். என்ன நடக்கிறது என்று அடுத்து டீசர், ட்ரைலர் படம் வரும் போது தான் தெரியும்.