டிரெய்லர் பாக்கவே டிக்கெட் கட்டணமா?! வெகு சிறப்பா கல்லா காட்டும் திரையரங்குகள்.!

Published on: April 5, 2022
---Advertisement---

முன்பெல்லாம் ஒரு படத்தின் ட்ரைலர் , டீசர், பாடல் என ஏதேனும் வந்தால், அதனை ரசிகர்கள் தங்களது மொபைல்களில் தான் பார்க்க முடியும்.  மேலும், அந்த சமயம் ரிலீஸ் ஆகி தியேட்டரில் ஓடி கொண்டிருக்கும் படங்களின் இடையில் ட்ரைலர் திரையிடப்படும்.

beast

ஆனால், தற்போது, விஷயமே வேறு, ஆம், ட்ரைலர் வெளியீட்டு தேதியன்று, சில திரையரங்குகள் ட்ரைலரை திரையிடுவதற்கு ரசிகர்களிடம் வசூல் செய்து விடுகின்றனர். அதாவது, முழு கட்டணம் இல்லை மாறாக 50 ரூபாய் மட்டும் வாங்கி கொள்கின்றனர்.

அப்படி வாங்கி தியேட்டருக்குள் ட்ரைலரை போட்டு காட்டி விடுகின்றனர். அதன் மூலம் ஒரு வசூல் பெற்று விடுகின்றனர். இந்த மாதிரியான வசூல் விவரங்கள் பெரும்பாலும் டிக்கெட் வரவு செலவில் கணக்கு காட்டப்படுவதில்லையாம்.

இதையும் படியுங்களேன் – பீஸ்ட் படத்திற்கு தடை.! கடும் கொந்தளிப்பில் ரசிகர்கள்.!

beast

இந்த மாதிரியான செயல் தொடர்ந்து நடைபெற்று தான் வருகிறதாம்.  ஏற்கனவே வலிமை பட ட்ரைலருக்கும் சில திரையரங்குகள் இவ்வாறு செய்தனவாம். சில தினங்களுக்கு முன்னர் வெளியான விஜயின் பீஸ்ட் படத்தின் ட்ரைலரை திரையிட சில முக்கிய திரையரங்குகளே கட்டணம் வசூலித்து ரசிகர்களை உள்ளே வரவழைத்தனராம். இது எப்போது அரசாங்கத்திற்கு தெரிந்து அடுத்த நடவடிக்கை எடுக்க போகிறார்களோ தெரியவில்லை.

Manikandan

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.

Leave a Comment