ஹலோ சன் பிக்சர்ஸ்!..எத்தன தடவதான் விஜய் ரசிகர்களை ஏமாத்துவீங்க!..
தளபதி விஜய் தற்போது பீஸ்ட் திரைப்படத்தில் நடித்து முடித்து விட்டார். இப்படத்தை டாக்டர் படத்தை இயக்கிய நெல்சன் இயக்கி வருகிறார். இப்படத்தின் ஷூட்டிங் அனைத்தும் முடிந்துவிட்டன. தற்போது போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் நடந்து வருகின்றன. பூஜா ஹெக்டே ஹீரோயினாக நடித்துள்ளார். செல்வராகவன் முக்கிய வில்லனாக நடித்துள்ளார்.
இப்படம் ஏப்ரல் மாதம் திரைக்கு வரும் என படக்குழு அறிவித்துவிட்டது. இப்படத்திலிருந்து சில போஸ்டர்கள் மட்டுமே தற்போது வரை வெளியாகி உள்ளது.
இப்படம் ரிலீஸ் ஆக இன்னும் இரண்டு மூன்று மாதங்களே இருப்பதால் அடுத்த கட்டமாக முதல் பாடல் அல்லது ஏதேனும் கிளசம்பஸ் வீடியோ வெளியாகும் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருந்தனர்.
அதிலும் குறிப்பாக பொங்கல் தினத்தில் இப்படத்தின் முதல் பாடல் வெளியாகும் என இணையத்தில் வதந்திகள் பரவியது. ஆனால் அது வெறும் வதந்தியாக மட்டுமே போனது.
தற்போது மீண்டும் ஒரு வதந்தி பரவி வருகிறது. அதாவது பீஸ்ட் திரைப்படத்தில் விஜய் ராணுவ அதிகாரியாக நடித்துள்ளாராம். ஆதலால் குடியரசு தினத்தை முன்னிட்டு விஜய் ராணுவ வீரர் சீருடையில் இருக்கும் புகைப்படம் ஒன்று படக்குழு சார்பில் வெளியிடப்படும் என தகவல் பரவி வருகிறது.
ஆனால், இது உண்மையில்லை என சினிமா வட்டாரவாசிகள் தெரிவிக்கின்றனர். ஆதலால் மீண்டும் விஜய் ரசிகர்கள் நம்பி ஏமாற வேண்டாம் என சினிமா வாசிகள் கூறிக்கொள்கின்றனர். அதிகாரப்பூர்வ தகவல் வரும் வரை எதனையும் எதிர்பார்க்க வேண்டாம்.