பீஸ்ட் தியேட்டரில் விஜய் ரசிகர்கள் அடிதடி...ரசிகரின் வாயை பஞ்சராக்கிய ஊழியர்கள்

by Manikandan |
பீஸ்ட் தியேட்டரில் விஜய் ரசிகர்கள் அடிதடி...ரசிகரின் வாயை பஞ்சராக்கிய ஊழியர்கள்
X

தளபதி விஜய் நடிப்பில் வெளியாகியுள்ள பீஸ்ட் திரைப்படத்திற்கு கலவையான விமர்சனங்களை பெற்றாலும், வசூலில் எந்த குறையும் வைக்கவில்லை. இந்த திரைப்படம் முதல் இரண்டு நாளிலேயே படம் 100 கோடி வசூலை எட்டிவிட்டது என தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.

மேலும், விஜய் ரசிகர்கள் கொண்டாட்டமும், அவ்வப்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. ஒரு தியேட்டர் திரை கூட தீப்பிடித்த வீடியோ இணையத்தில் வைரலானது. அதற்கு கூட பீஸ்ட் பாடலான திரை தீப்பிடிக்கும் பாடலை போட்டு எடிட் செய்து வைராக்கி விட்டனர்.

தற்போது இன்னோர் சம்பவம் பீஸ்ட் திரையிடப்பட்ட திரையரங்கில் நடைபெற்றுள்ளது. கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் பீஸ்ட் திரை படம் பார்க்க சென்ற ரசிகர்களுக்கும் திரையரங்க பணியாளர்களுக்கும் மோதல் ஏற்பட்டது.

திரை படம் பார்க்க வந்த ரசிகர்கள் மது அருந்தி விட்டு வந்ததாக கூறப்படுகிறது. வழக்கமாக மது அருந்திவிட்டு தியேட்டருக்கு வரக்கூடாது. வருவதற்கு அனுமதி இல்லை. ஆதலால், திரையரங்க பணியாளர்கள் படம் பார்க்க அவர்களை அனுமதிக்காமல் தடுத்தத்துள்ளனர்.

இதையும் படியுங்களேன் - நெல்சனை கண்டு பதறும் தலைவர் ஃபேன்ஸ்.! பரபரக்கும் மீம்ஸ்.!

இதில் திரையரங்க ஊழியர்களுக்கும், ரசிகர்களுக்கும் வாக்குவாதம் முற்றி 8 பேர் கொண்ட ரசிகர்களின் குழு திரையரங்க பணியாளர்களை தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் இவர்களுக்கும் இடையில் ஏற்பட்ட மோதலில் இருவருக்கு இரத்த காயங்கள் ஏற்பட்டது . இந்த சம்பவம் படம் பார்க்க வந்தே மற்ற ரசிகர்களை பதட்டமடைந்தனர்.

Next Story