பீஸ்ட் விஜயை வச்சி செய்து வரும் கமல் ரசிகர்கள்.! ஒரு போட்டோ வந்தது குத்தமாபா.?!
தளபதி விஜய் நடிப்பில் தற்போது ரிலீசுக்கு ரெடியாகியுள்ள திரைப்படம் பீஸ்ட். இந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் இப்போதே எதிர்பார்ப்பு உச்சத்தில் இருக்கிறது. இந்த படம் ஏப்ரல் 13ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளது. நெல்சன் இப்படத்தை இயக்கியுள்ளார்.
அதற்கு அடுத்த தேதியில் பான் இந்தியா திரைப்படமான கே.ஜி.எப் -2 ரிலீஸ் ஆக உள்ளது. இந்த திரைப்படத்திற்கும் எதிர்பார்ப்பு அதிகமாகத்தான் உள்ளது. அனால் தமிழகத்தில் முதலுரிமை பீஸ்ட் திரைப்படத்திற்கு தான்.
இந்த படத்தில் இருந்து ஏற்கனவே சில போஸ்டர்கள் மற்றும் 2 பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடம் ஏகோபித்த வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில், தற்போது இப்படத்திலிருந்து சில போட்டோஷூட் புகைப்படங்கள் நேற்று இணையத்தில் வெளியாகியுள்ளன.
இதையும் படியுங்களேன் - நடிகர்களுடன் காதலில் விழுந்து கடலில் கவுந்த நடிகைகள்.! இந்த லிஸ்ட் போதுமா.?!
அதனை பார்த்த சில கமல் ரசிகர்கள் அதனை அபூர்வ சகோதரர்கள் புகைப்பட போஸ்டர்களோடு ஒப்பிட்டு , இதனை விஜய் காப்பி அடித்துள்ளார் என கிண்டல் செய்து வருகின்றனர். அது வெறும் கருப்பு வெள்ளை கோட் ஷூட் மட்டுமே அதனை யார் போட்டாலும் அப்டித்தான் இருக்கும். இருந்தாலும் இரண்டும் ஒன்று தான் சில ரசிகர்கள் கூறிவருகின்றனர்.