ஐஸ்வர்யா ராய்க்கு முன்னாடியே ரஜினியுடன் நடிக்க இருந்த அந்த அழகி! ச்ச மிஸ் ஆயிடுச்சே

by Rohini |   ( Updated:2024-01-08 08:21:20  )
rajini
X

rajini

Actor Rajini: கோலிவுட்டில் கிட்டத்தட்ட 40 ஆண்டுகளுக்கும் மேலாக இன்னும் ஒரு டாப் ஹீரோவாக சூப்பர் ஸ்டாராக ஜொலித்துக் கொண்டிருப்பவர் நடிகர் ரஜினிகாந்த். 70களில் இருந்து இன்று வரை ஹீரோவாகவே நடித்து வரும் ரஜினியின் மாஸ் நாளுக்கு நாள் கூடிக் கொண்டே வருகின்றது.

பிறந்த குழந்தைகளும் அவருக்கு ரசிகராக மாறி வருகிறார்கள். அந்தளவுக்கு அனைத்து தரப்பினர்கள் மத்தியிலும் ரஜினி ஒரு நிலையான இடத்தோடு சிம்மாசனம் போட்டு அமர்ந்துவிட்டார். ஒரு அசைக்க முடியாத பில்லராக இன்று வளர்ந்து நிற்கிறார்.

இதையும் படிங்க: டி.எம்.எஸ் தான் பாடிய பாடலை மீண்டும் கேட்டதே இல்லையாம்!.. ஒற்றை பாடலால் அவர் வாழ்க்கையில் அடித்த பூகம்பம்!..

இவருடன் சேர்ந்து எத்தனையோ நடிகைகள் நடித்திருக்கிறார்கள். அந்தந்த தலைமுறைகளுக்கு ஏற்ப பல நடிகைகள் இவருக்கு ஜோடியாக நடித்திருக்கிறார்கள். நடித்தும் வருகிறார்கள். ஏன் உலக அழகி ஐஸ்வர்யா ராய் கூட ரஜினியுடன் ஜோடியாக நடித்துவிட்டார்.

இந்த நிலையில் நடிகை ரம்பா ரஜினி குறித்து பேசிய ஒரு பேட்டி இப்போது வைரலாகி வருகின்றது. ரஜினியுடன் ரம்பா அருணாச்சலம் என்ற படத்தில் ஜோடியாக நடித்திருப்பார். அந்தப் படத்தை சுந்தர் சிதான் இயக்கினார். ஐதராபாத்தில் படப்பிடிப்பாம்.

இதையும் படிங்க: சிவாஜி அப்பவே பதில் சொல்லிட்டார்!.. கலைஞர் 100 விழாவில் ஏழரையை இழுத்து வசமாக சிக்கிய ரஜினி..

ரம்பாவை வரச் சொன்ன சுந்தர் சி மூன்று நாள்களாகியும் அவருக்குண்டான ஷாட் வரவில்லையாம். இதனால் கடுப்பான ரம்பா சுந்தர் சியிடன் கேட்க மறு நாள் காலை 7 மணிக்கு சூட்டிங் என சொல்லியிருக்கிறார். 6.55க்கெல்லாம் மேக்கப்புடன் ரம்பா செல்ல அதற்கு முன்னதாகவே ரஜினி அங்கு இருந்தாராம்.

உடனே ரஜினி ரம்பாவிடம் ‘ உங்க கதாபாத்திரம் மிகவும் முக்கியமான கதாபாத்திரம். முதலில் உங்க கதாபாத்திரத்தில் சுஸ்மிதா சென்தான் நடிக்க இருந்தார்கள். அவர்களுக்கு மிஸ் ஆகி இப்போ நீங்கள் நடிக்க போறீங்க’ என்று சொன்னாராம் ரஜினி.

இதையும் படிங்க: இத செஞ்சீங்களாயா யாராவது? கலைஞர் 100 விழாவிற்கு அஜித், விஜய் வராததற்கான காரணத்தை போட்டுடைத்த பிரபலம்

Next Story