Connect with us

Mankatha: சத்யராஜ் நடிக்க வேண்டிய படமா ‘மங்காத்தா’? அடுத்தடுத்து ஷாக் கொடுக்கும் இயக்குனர்

latest news

Mankatha: சத்யராஜ் நடிக்க வேண்டிய படமா ‘மங்காத்தா’? அடுத்தடுத்து ஷாக் கொடுக்கும் இயக்குனர்

அஜித் நடிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளியான திரைப்படம் மங்காத்தா. இது அஜித்துக்கு 50வது திரைப்படம். அஜித்துக்கு ஜோடியாக த்ரிஷா நடித்திருப்பார். கூடவே அர்ஜூன் முக்கிய படமான கேரக்டரில் நடித்திருப்பார். படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருந்தார். படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தான் தயாரித்திருந்தது. படம் வெளியாகி சூப்பர் டூப்பர் வெற்றியை ருசித்தது.

இந்த நிலையில் கடந்த 2011 ஆம் ஆண்டு வெளியான மங்காத்தா படத்தை இன்று ரீ ரிலீஸ் செய்திருக்கின்றனர் படக்குழு. படத்தை பார்க்க அனைத்து திரையரங்குகளிலும் ரசிகர்களின் கூட்டம் அலைமோதுகிறது. குறிப்பாக ஆதிக் ரவிச்சந்திரன் மற்றும் அஜித்தின் மேலாளரான சுரேஷ் சந்திரா ஆகிய இருவரும் மங்காத்தா படத்தை ஒரு ரசிகராக பார்த்து கொண்டாடி வருகின்றனர்.

இதில் ஆதிக் விசில் அடித்துக் கொண்டும் கத்திக் கொண்டும் மங்காத்தா படத்தை பார்த்து வருகிறார். இதற்கிடையில் மங்காத்தா ரீ ரிலீஸை ஒட்டி வெங்கட் பிரபு யூடியூப் சேனலில் பேட்டி கொடுத்திருக்கிறார். அதில் மங்காத்தா படத்தில் அவர் பணியாற்றிய அனுபவம் குறித்தும் படத்தைப் பற்றியும் பேசியுள்ளார்.

அவர் பேட்டியில் கூறும் போது அஜித்துக்கு முன்பு போலீஸ் கேரக்டரில் சத்யராஜ்தான் நடிக்க வேண்டியதாம். அதுமட்டுமில்லாமல் ஜீவா, விவேக் ஓபராய், மற்றும் பிரசன்னா இவர்களும் நடிப்பதாக இருந்ததாம். அதன் பிறகு ஒரு நாள் அஜித்தை சந்திக்க வாய்ப்பு கிடைத்த போது இந்த கதையின் ஒன் லைனை வெங்கட் பிரபு அஜித்திடம் சொல்லியிருக்கிறார்.

அஜித்துக்கு மிகவும் பிடித்துவிட்டதாம். அதன் பிறகுதான் ஒட்டுமொத்த ஆர்ட்டிஸ்ட்டும் மாற்றப்பட்டிருக்கின்றனர். அர்ஜூன் கேரக்டருக்கு முதலில் பரிந்துரைக்கப்பட்டவர் நாகர்ஜூனாவாம். ஆனால் அவருடைய கால்ஷீட் பிரச்சினையால் நாகர்ஜூனாவால் நடிக்கமுடியவில்லையாம். அதன் பிறகுதான் அர்ஜூன் உள்ளே வந்திருக்கிறார். ஆரம்பத்தில் அர்ஜூன் தயங்கினாராம்.

ஏனெனில் மங்காத்தா படத்தில் அர்ஜூன் கேரக்டர் சாதாரணமாக இருப்பதை உணர்ந்திருக்கிறார். ஆனால் படம் வெளியான பிறகு வெங்கட் பிரபுவை அழைத்து தன்னுடைய நன்றியை தெரிவித்தாராம் அர்ஜூன். அந்தப் படத்தில் தன்னுடைய கேரக்டர் இந்தளவு வலிமையாக இருக்கும் தான் எதிர்பார்க்கவே இல்லை என்று கூறி தன்னுடைய சந்தோஷத்தை பகிர்ந்திருக்கிறார் அர்ஜூன்.

To Top