மணிரத்னம் படத்தில் நடிக்கவிருந்த அஜித்!.. திடீரென நேர்ந்த சோகம்.. மிஸ் ஆனது இப்படித்தான்!..
Actor Ajith: தமிழ் சினிமாவில் இப்போது ஒரு மாஸ் ஹீரோவாக ஸ்டைலிஷான ஹீரோவாக வலம் வருபவர் நடிகர் அஜித். அவருக்கு இருக்கும் க்ரஷ் வேறெந்த நடிகருக்கும் இல்லை என்றுதான் சொல்லவேண்டும். ரசிகர்கள் மத்தியில் பல விமர்சனங்கள் அஜித் மீது இருந்தாலும் அவருக்கான ரசிகர்கள் கூட்டம் நாளுக்கு நாள் பெருகிக் கொண்டேதான் இருக்கின்றன.
தற்போது அஜித் விடாமுயற்சி படத்தில் பிஸியாக இருக்கிறார். அந்தப் படம் முடிந்த பிறகு ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் குட் பேட் அக்லி என்ற ஒரு புதிய படத்திலும் நடிக்க இருக்கிறார். இந்த இரு படங்களின் மீது பெருமளவு எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. ஒரு பக்கம் சினிமாவில் பிஸியாக இருந்தாலும் இன்னொரு பக்கம் அவருடைய பொழுதுபோக்கிற்காக தனியாக நேரம் எடுத்து செலவழித்து வருகிறார்.
இதையும் படிங்க: செழியனை தொடர்ந்து சந்தேகப்படும் ஜெனி… இன்னும் பாக்கியாவுக்கு வேலை இருக்கும் போலயே!
தன் வாழ்க்கை எப்படி இருக்க வேண்டும் என்பதை திட்டம் போட்டு வகுத்து வைத்திருக்கிறார் அஜித். யாரை பற்றியும் கவலை இல்லாமல் மிகவும் சந்தோஷமாக வாழ்ந்து வருகிறார். சமீபத்தில் கூட அஜித் கிரிக்கெட் வீரர் நடராஜன் இணைந்திருந்த ஒரு வீடியோ புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலானது. அஜித் படம் வெளியாவதில் ஏற்படும் மகிழ்ச்சியை விட அவர் சம்பந்தப்பட்ட ஒரு புகைப்படம் வெளிவருவதையே ரசிகர்கள் ஒரு திருவிழா போல கொண்டாடி வருகிறார்கள்.
இந்த நிலையில் அஜித்தும் விஜயும் சேர்ந்து நடித்த ஒரே திரைப்படம் ‘ராஜாவின் பார்வையிலே’. இந்தப் படத்தை தயாரித்த தயாரிப்பாளர் சௌந்தர பாண்டியன் அஜித் பற்றிய ஒரு சுவாரஸ்ய தகவலை கூறினார். இந்தப் படத்திற்காக முதலில் கால்ஷீட் கேட்டது விஜயிடம்தானாம். விஜய் தரப்பில் சம்மதம் கிடைத்ததும் இன்னொரு ஹீரோவை தேடிக் கொண்டிருந்தார்களாம்.
இதையும் படிங்க: பார்த்திபன் சொன்ன கதையை கேட்டு மெர்சல் ஆயிட்டேன்!.. ராமராஜன் சொல்றதை கேளுங்க!..
ஏற்கனவே தயாரிப்பாளர் சௌந்தர பாண்டியனுக்கு அஜித் நண்பராக இருந்திருக்கிறார். அமராவதிக்கு முன்பே அஜித் மணிரத்னம் தயாரிப்பில்தான் நடிக்க இருந்தாராம். இவரிடம் உதவி இயக்குனராக இருந்த ரமணாதான் அந்தப் படத்தை இயக்குவதாக இருந்ததாம். அதனால் அந்தப் படத்திற்கான ஸ்டில்ஸ் எடுக்க அஜித்தை வரவழைத்து கேமிரா மேன் போட்டோ எடுத்துக் கொண்டிருந்தாராம்.
எடுக்கும் போதே அந்த கேமிரா மேனுக்கு ஃபிக்ஸ் வந்து இறந்துவிட்டாராம். அதனால் அந்த புகைப்படம் எல்லாம் அமராவதி திரைப்படத்திற்காக பயன்படுத்தப்பட்டுவிட்டதாம். இல்லையென்றால் அமராவதிக்கு முன்பே அஜித்தை மணிரத்னம்தான் அறிமுகப்படுத்தியிருப்பாராம். இதன் மூலம் கிடைத்த நட்பால்தான் ராஜாவின் பார்வையிலே திரைப்படத்தில் அஜித் நடிக்க வந்ததாக சௌந்தர பாண்டியன் கூறினார்.
இதையும் படிங்க: இந்த நடிகையை வர்ணித்து கமல் எழுதிய ரொமாண்டிக் பாடலா அது? ஹிட்டானதுக்கு இதுதான் காரணமா?