Actor MGR: தமிழ் சினிமாவில் ஒரு மாபெரும் நடிகராக உருவெடுத்தவர் புரட்சித்தலைவர் எம்ஜிஆர். நடிப்பையும் அரசியலையும் தன் இரு கண்களாக பார்த்தவர் எம்ஜிஆர். தமிழ் சினிமாவில் முப்பதாண்டு காலம் மிகவும் வெற்றிகரமாக பயணித்தார்.
கலையுலகில் இருந்து அரசியலில் ஆதிக்கம் செலுத்தும் தலைவனாக மாறிய போதும் ஏழைகளிடம் தோழனாகவும் அன்பாகவுமே பழகினார் எம்ஜிஆர். ஏழை எளிய மக்களின் துயரை தீர்க்க வந்த கடவுள் என்றே மக்கள் எம்ஜிஆரை நம்ப ஆரம்பித்தனர்.
இதையும் படிங்க: சண்டை மட்டும் போதுமா?!.. கொஞ்சம் கிளுகிளுப்பாவும் நடிங்க!. எம்.ஜி.ஆரை மாற்றிய இயக்குனர் இவர்தான்…
இன்றளவும் பல வீடுகளில் எம்ஜிஆரின் புகைப்படத்தை வைத்து பூஜை செய்யும் ரசிகர்களை நம்மால் காண முடிகிறது. தன்னுடைய இளம் வயதிலேயே நடிப்பின் மீது ஆர்வத்தை வரவழைத்துக் கொண்டார் எம்ஜிஆர். சதிலீலாவதி என்ற படத்தில் துணை நடிகராக தன் அறிமுகத்தை பதிவு செய்தார் எம்ஜிஆர்.
அதன் பிறகு அவரை ஹீரோவாக ஒரு ஆக்ஷன் மன்னனாக உருவாக்கிய படம் ராஜகுமாரி. இது கலைஞரின் கைவண்ணத்தில் வெளிவந்த படம். நடிகராக மட்டுமில்லாமல் இயக்குனராக தயாரிப்பாளராக எம்ஜிஆரை மென்மேலும் இந்த திரையுலகம் வளர செய்தது.
இதையும் படிங்க: தன் ரசிகர்களுக்காக பலரிடமும் மன்னிப்பு கேட்ட தல அஜித்!. தளபதி இவர்கிட்ட கத்துக்கணும்..
பல ஹீரோயின்களுடன் எம்ஜிஆர் நடித்திருந்தாலும் அதிகமாக ஜோடி சேர்ந்து நடித்தது ஜெயலலிதாதான். இருவரும் ரசிகர்கள் விரும்பும் ஜோடிகளாகவே மாறினார்கள். அப்படி இருவரும் சேர்ந்து நடித்த படத்தில் மிகவும் புகழ்பெற்ற திரைப்படமாக மாறியது அடிமைப்பெண்.
அந்தப் படத்தில் அம்மா என்றால் அன்பு என்ற பாடலை ஜெயலலிதா பாடியிருப்பார். அதுதான் ஜெயலலிதா பாடிய முதல் பாடலும் கூட. ஆனால் முதலில் அந்தப் பாடலை பாடியது டி.எம்.சௌந்தராஜனாம். கேவி மகாதேவன் இசையில் அமைந்த இந்த பாடலை டி.எம்.எஸை வைத்து ரிக்கார்டிங் எல்லாம் செய்து முடித்துவிட்டார்களாம்.
இதையும் படிங்க: பார்க்கிங் விமர்சனம்: ரெண்டுல ஒண்ணு பார்த்துடலாம்!.. பார்க்கிங் பார்க்கலாமா? வேண்டாமா?..
அதன் பிறகு எம்ஜிஆர் வந்து கேவியிடம் இந்த பாடல் இருக்கே? இந்த பாடல் இடம் பெறும் போது நான் பேச முடியாத சூழலில் இருப்பேன். அப்படி இருக்கும் போது என்னால் பாடி எப்படி நடிக்க முடியும்? அதனால் இந்த பாடலை அம்முவை பாட வையுங்கள். டி.எம்.எஸுக்கு வேறொரு பாடலை கொடுக்கலாம் என்று சொன்னபிறகே ஜெயலலிதா இந்த பாடலை பாடியிருக்கிறார். டி.எம்.எஸ் அதே படத்தில் தாயில்லாமல் நானில்லை என்ற பாடலை பாடினாராம்.
நேற்று சோசியல்…
தனது தந்தை…
Sun serials:…
தமிழக வெற்றிக்கழகம்…
தமிழ் சினிமாவில்…