Alaigal oyvathillai Movie: தமிழ் சினிமாவில் அந்தக் காலத்தில் இருந்து இதுவரை எல்லா திரைப்படங்களும் காதலை கடக்காமல் போனதே இல்லை. காதலை மையப்படுத்தி எத்தனையோ திரைப்படங்கள் இன்று வரை வெளிவந்து கொண்டே இருக்கின்றன.
தேவதாஸ், கல்யாணப்பரிசு, காதலிக்க நேரமில்லை, போன்ற எத்தனையோ படங்கள் காலத்திற்கு ஏற்றவாறு வெளிவந்து ரசிகர்களின் மகத்தான வரவேற்பை பெற்றிருக்கின்றன. துள்ளுவதோ இளமை படம் விடலை பருவ காதலை விளக்கும் படமாக வெளியானது.
இதையும் படிங்க: பக்காவா செட்டில் ஆகப்போகும் நயன்…தமிழ் படத்துக்குதான் கிராக்கி பண்ணுவாங்க அம்மணி…
அப்படிப்பட்ட காதலை 80களிலேயே அழகாக வெளிப்படுத்தியவர் பாரதிராஜா. அலைகள் ஓய்வதில்லை என்ற அற்புதமான காவியத்தை இந்த திரையுலகிற்கு கொடுத்து பெருமை சேர்த்தார். அந்தப் படத்தை இப்பொழுது பார்த்தாலும் கூட ஒரு புதுமையான காதல் ஓவியமாகவே ரசிக்கப்படும்.
அந்தப் படத்தில் மீசை இல்லாத விடலை பருவ கதாபாத்திரத்தில் கார்த்திக் முதன் முதலில் அறிமுகமானார். அவருக்கு ஜோடியாக நடிகை ராதாவும் அறிமுகமான திரைப்படமும் இதுதான். இவர்களுடன் நடிகை சில்க் ஸ்மிதா மற்றும் தியாகராஜன் குணச்சித்திர கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்கள்.
இதையும் படிங்க: இவர் தான் எனக்கு ஃபேவரிட்… நீங்க கமல் ஃபேன் இல்லையா லோகி… பர்னிச்சரை உடைச்சிட்டீங்களே்…
சில்க் ஸ்மிதாவை முதன் முதலில் கேரக்டர் ரோலில் போட்டு அழகுப்பார்த்தவரும் பாரதிராஜாதான். இந்த நிலையில் இந்தப் படத்தில் தியாகராஜன் கதாபாத்திரத்தில் முதன் முதலில் நடிக்க வேண்டியது வாகை சந்திரசேகர்தானாம்.
இவரை பாரதிராஜா ஒப்பந்தம் செய்து விட்டு படப்பிடிப்பிற்கும் வரச் சொல்லியிருக்கிறார். இன்னொரு பக்கம் தியாகராஜனுக்கு இளையராஜா வாக்குறுதி கொடுத்தாராம். அலைகள் ஓய்வதில்லை படத்தில் நடிக்க வைப்பதாக அவரிடம் சொல்லியிருக்கிறார்.
இதையும் படிங்க: ஒரே நாள்… ரயில் பயணத்திலேயே மனோரமா செய்த ஆச்சரியப்படும் சம்பவம்… அசத்திட்டீங்களே ஆச்சி..!
வாகை சந்திரசேகர் அங்கு போக பாரதிராஜா வாகை சந்திரசேகரிடம் ‘ நாம் இன்னொரு படத்தில் சேர்ந்து பணியாற்றுவோம். இளையராஜா வாக்குறுதி கொடுத்து விட்டாராம்’ என்று சொல்ல பெருந்தன்மையுடன் சம்மதித்திருக்கிறார் வாகை சந்திரசேகர்.
ஐயப்ப பக்தர்களின்…
இசை அமைப்பாளர்,…
தமிழ்த்திரை உலகில்…
Thalapathy 69: விஜய்…
இளையராஜா 'இசைஞானி'…