இறப்பதற்கு இரு தினங்களுக்கு முன் கேப்டன் செய்த செயல்.. கண்ணீர் மல்க கூறிய மகன்

by Rohini |
kanth
X

kanth

Captain Vijaykanth: தமிழ் சினிமாவிற்கே பெரிய இழப்பாக இருந்தது விஜயகாந்தின் மறைவு. ஒட்டுமொத்த சினிமா கலைஞர்களையும் சோகத்தில் ஆழ்த்தியது. கிட்டத்தட்ட ஒரு மாதம் கடந்த நிலையிலும் விஜயகாந்தின் நினைவிடத்திற்கு அவ்வப்போது மக்கள் கூட்டம் அலைமோதிகின்றது.

எம்ஜிஆருக்கு கூட இந்தளவு மக்கள் வந்த வண்ணம் இல்லை. ஆனால் விஜயகாந்த் நினைவிடத்திற்கு நாள்தோறும் ரசிகர்கள் வந்த வண்ணம் இருக்கிறார்கள். இதற்கெல்லாம் காரணம் அவர் செய்த உதவிகள் மற்றும் அவரின் நல்ல சிந்தனைகள் தான்.

இதையும் படிங்க: 2023-ல் ஹீரோக்களை ஓவர்டேக் செய்த டாப் 3 வில்லன்கள்!.. கெத்து காட்டிய பஹத் பாசில்…

இந்த நிலையில் நேற்று நடிகர் சங்கம் சார்பாக விஜயகாந்திற்கு இரங்கல் கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்திற்கு விஜயகாந்தின் மகன்கள் இருவரும் மற்றும் சுதீஷ் ஆகியோரும் கலந்து கொண்டார்கள். விஷால் , நாசர், கார்த்தி, சிம்ரன், விக்ரம், ஜெயம் ரவி போன்ற திரைபிரபலங்களும் இந்த இரங்கல் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

மேடையில் ஏறி பேசிய விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகரன் கண்ணீர் மல்க தன் சோகத்தை வெளிப்படுத்தினார். அதாவது என் முகத்தை நான் கண்ணாடியில் பார்த்ததை விட என் அப்பா முகத்தைத்தான் அதிகமாக பார்த்து வளர்ந்திருக்கிறேன் என்று கூறும் போது,

இதையும் படிங்க: ஒருவழியா அடுத்த மகாசங்கமத்தை இழுத்துவிட்டாச்சே!… இதுவே வேலையா இருக்கே இவங்களுக்கு!

அங்கு இருந்தவர்கள் எல்லார் கண்களிலும் கண்ணீர் வருவதை பார்க்க முடிந்தது. அதுமட்டுமில்லாமல் விஜயகாந்த் எப்போதுமே மற்றவர்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்று சொல்லியே அவரது மகன்களை வளர்த்திருக்கிறாராம். அதனால்தான் இன்றளவும் அவர் நினைவிடத்தில் வைத்து சாப்பாடுகள் கொடுத்து வருகிறோம் என்று விஜயபிரபாகரன் கூறினார்.

அதுமட்டுமில்லாமல் பல சேனல்கள் கேப்டனுக்கு மறதி இருப்பதாகவும் யாரையும் அடையாளம் தெரியவில்லை என்றும் எழுதி வந்தார்கள். ஆனால் அதெல்லாம் வெறும் பொய். அவர் இறப்பதற்கு இரண்டு தினங்கள் முன்பு கூட அதாவது டிசம்பர் 25 ஆம் தேதி அவரது டிரைவரை அழைத்து அவர் நடித்த படங்களின் பாடல்களை போடச் சொல்லி அந்த பாடல்களை கேட்டுக் கொண்டிருந்தாராம்.

இதையும் படிங்க: விஜய் படத்துலயே கேமியோவா நடிக்க வரல!.. விஜயகாந்த் மகன் படத்துல நடிப்பாரா விஷால்?..

அது விஜயபிரபாகரனுக்கே தெரியாதாம். அவரது டிரைவர் சொல்லித்தான் தெரியுமாம். உடனே சிசிடிவியில் பார்க்கும் போது விஜயகாந்த் அந்த பாடல்களை கேட்டுக் கொண்டே கையில் தாளம் தட்டி ரசித்துப் பார்த்துக் கொண்டிருந்தாராம்.

Next Story