ரஜினிக்கு வந்த வாய்ப்பைதான் சிம்பு எடுத்துக்கிட்டாரா? – எஸ்.டி.ஆர் 48க்கு பின்னால் நடந்த குளறுபடிகள்!

by Rajkumar |
rajini simbu
X

rajini simbu

தற்போது உள்ள தமிழ் கதாநாயகர்களில் உச்சத்தில் இருக்கும் ஒரு கதாநாயகராக ரஜினிகாந்த் இருக்கிறார். கபாலி திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து இளம் இயக்குனர்களுக்கு வரிசையாக வாய்ப்புகளை கொடுத்து வருகிறார் ரஜினிகாந்த்.

நெல்சன் இயக்கத்தில் உருவாகும் ஜெயிலர் திரைப்படத்திற்கு பிறகு இயக்குனர் ஞானவேல் இயக்கத்தில் அடுத்த படத்தில் நடிக்க இருக்கிறார். ஆனால் இதற்கு முன்பே லோகேஷ் இயக்கத்தில் ரஜினி நடிப்பதற்கான வாய்ப்புகள் இருந்தன.

jailer

jailer

விக்ரம் திரைப்படம் இயக்குவதற்கு முன்பு ரஜினி நடிப்பில், கமல் தயாரிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ஒரு திரைப்படம் தயாராக இருந்தது. ஆனால் அந்த சமயத்தில் ரஜினி பிஸியாக இருந்ததால் கமல் தானே நடிக்கிறேன் என நடித்த படம்தான் விக்ரம். விக்ரம் படத்திற்கு அடுத்துக்கூட ரஜினியை வைத்து படம் தயாரிக்கும் விருப்பம் கமலுக்கு இருந்துள்ளது.

நெல்சன் தவறவிட்ட வாய்ப்பு:

நெல்சன் சினிமாவிற்கு வந்தபோது சிம்பு நடிப்பில் வேட்டை மன்னன் என்கிற திரைப்படத்தைதான் இயக்க இருந்தார். ஆனால் அப்போது அதற்கு வாய்ப்பு அமையவில்லை. எனவே பத்து தல படத்திற்கு பிறகு இருவரும் இணைந்து படம் தயாரிக்க திட்டமிட்டிருந்தனர். ஆனால் ஜெயிலர் படப்பிடிப்பு தாமதமானதால் அந்த வாய்ப்பை நெல்சன் இழந்துள்ளார்.

அதே போல ரஜினி அடுத்து ஞானவேல் திரைப்படத்தில் நடிக்க உள்ளதால் ரஜினி இப்போது கமல் தயாரிப்பில் படம் நடிப்பதற்கான வாய்ப்புகள் இல்லை. எனவே கமலும் வெவ்வேறு நடிகர்களை வைத்து திரைப்படம் தயாரிக்க முடிவு செய்துள்ளார்.

இந்த நிலையில்தான் கமலும் சிம்புவும் கூட்டணி போட்டு எஸ்.டி.ஆர் 48 திரைப்படத்திற்கான ப்ரோமோ வெளியானது.

Next Story