விஜய் ரசிகர்களை கடும் கோபத்துக்கு உள்ளாக்கிய சன் பிக்ச்சர்ஸ்.! சத்தமில்லாமல் செய்த வேலை இதுதான்.!

by Manikandan |
விஜய் ரசிகர்களை கடும் கோபத்துக்கு உள்ளாக்கிய சன் பிக்ச்சர்ஸ்.! சத்தமில்லாமல் செய்த வேலை இதுதான்.!
X

சன் பிக்சர்ஸ் அடுத்ததாக தளபதி விஜய்யை வைத்து பீஸ்ட் திரைப்படம், நடிகர் சூர்யாவை வைத்து எதற்கும் துணிந்தவன் திரைப்படம், அடுத்து தனுஷ், விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன் என அடுத்தடுத்து முன்னனி ஹீரோ படங்களை தயாரித்து வருகிறது.

இதில் அதிக எதிர்பார்ப்புள்ள திரைப்படம் என்றால் அது விஜய் நடிப்பில் உருவாகும் பீஸ்ட் திரைப்படம் தான். அந்த திரைப்படம் ஏப்ரல் மாதம் 14 ஆம் தேதி வெளியாக உள்ளது. இதனை எதிர்பார்த்து விஜய் ரசிகர்கள் மட்டுமின்றி அனைத்து ரசிகர்களும் காத்திருக்கின்றனர்.

தற்போது வெளியாகும் திரைப்படங்கள் தமிழ் மட்டுமல்லாது மற்ற மொழிகளிலும் குறிப்பாக இந்தி தெலுங்கு மொழிகளிலும் ஒரு பான் இந்தியா திரைப்படம் போல வெளியாகி வருகிறது.

இதையும் படியுங்களேன் - இத நானே எதிர்பார்க்கல.! வெளிப்படையாக பேசிவிட்டார் சிம்பு.! வெளியான சூப்பர் வீடியோ.!

வலிமை திரைப்படம் கூட ஐந்து மொழிகளில் வெளியானது. சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் திரைப்படமும் ஐந்து மொழிகளில் வெளியாகும் என போஸ்டர் வெளியிடப்பட்டது.

ஆனால், விஜய் நடிப்பில் உருவாகும் பீஸ்ட் திரைப்படத்தின் இந்தி ரீமேக் உரிமையை தற்போது சன் பிக்சர்ஸ் விற்று விட்டதாம். அதன் காரணமாக பீஸ்ட் திரைப்படம் தமிழ் தெலுங்கு மலையாள மொழிகளில் மட்டுமே வெளியாகும் என தற்போது கூறப்படுகிறது. இதனால் இத்திரைப்படம் ஹிந்தியில் வெளியாகும் என எதிர்பார்த்த ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியுள்ளது.

Next Story