Cinema History
சம்பளமே வாங்காமல் பாக்கியராஜ் நடித்த படம் இதுதான்!.. இதுக்கு யார் காரணம்னு தெரியுமா?..
பாக்கியராஜ் சம்பளமே வாங்காமல் ஒரு படம் நடித்துள்ளார். அது என்ன என்பது குறித்து கதாசிரியர் கலைஞானம் தெரிவித்துள்ளார். பார்ப்போமா…
விதின்னு ஒரு படம் வந்தது. இதுல பூர்ணிமா ஜெயராம், சுஜாதாவை எல்லாம் போட்டு பாலாஜி படமா எடுத்தாரு. இதுல என்ன கதைன்னா ஒரு தப்பான ஒருத்தன ஒரு பொண்ணு அது தான் சுஜாதா விசாரணை பண்ணி தண்டனை வாங்கிக் கொடுப்பார். இதுல பூர்ணிமா ஜெயராம் நடிச்சிருக்காங்க. இந்தப் படத்துல கோர்ட் சீன் அடிக்கடி வரும்.
இந்தில இதுக்கு கிளாஸ் ஆடியன்ஸ் இருக்கு. தெலுங்குலயும் எடுக்கப் போறாங்க. ஆனால் தமிழ்ல கோர்ட் சீன் திரும்ப திரும்ப வருது. ஆடியன்ஸ் ஒத்துக்குவாங்களான்னு நினைக்கிறாரு பாலாஜி. உடனே பூர்ணிமா ஜெயராம்கிட்ட வந்து சொல்றாரு.
பாக்கியராஜ் இந்தப் படத்துல ஒரு சீனாவது வரணும்னு அவருக்கிட்ட கேட்டு நடிக்க வைங்கன்னு சொல்றாரு. அந்தக் காலத்துல பாக்கியராஜ் வந்தாலே தியேட்டரே கலகலப்பா ஆயிடும். எஸ்எஸ்சந்திரன் சொல்வாரு. பாக்கியராஜ் படம் பார்க்கப் போறோம்னாலே அங்கிருந்தே சிரிச்சிக்கிட்டே போவாங்களாம்.
பூர்ணிமாவும் ஒத்துக்கிட்டு பாக்கியராஜ ஒரு சீன்ல நடிக்க வைக்க சொன்னாங்க. பாலாஜி நினைச்ச மாதிரி அந்த இடத்துல படமும் கலகலப்பா ஆயிடுச்சு. அந்தப் படத்துக்காக பாக்கியராஜ் சம்பளமே வாங்கலை. ஒரு காசு கூட வாங்கல. டிரஸ், மேக்கப்னு எதுக்குமே காசு வாங்கல. இது அவருக்கு எப்பவுமே உள்ள ஒரு தயாள குணம்.
மேற்கண்ட தகவலை பிரபல கதாசிரியர் கலைஞானம் தெரிவித்துள்ளார்.
1984ல் விதி படம் வெளியானது. சுஜாதா, மோகன், பூர்ணிமா, ஜெய்சங்கர் உள்பட பலர் நடித்துள்ளனர். அந்தக் காலத்தில் கோர்ட் சீனுக்காகவே இந்தப் படம் சக்கை போடு போட்டது. ஆனந்தவல்லி பாலாஜி தயாரிக்க, கே.விஜயன் இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
சங்கர் கணேஷ் இசையில் பாடல்கள் எல்லாமே சூப்பர் ரகங்கள். தேவதாசும் நானும், வாடி மச்சி, எல்ஓவிஈ லவ், விதி வரைந்த ஆகிய பாடல்கள் உள்ளன. 80களின் இளசுகளைக் கட்டிப்போட்ட படம். அந்தக் காலத்தில் இந்தப் படத்தின் வசனம் பட்டி தொட்டி எங்கும் பட்டையைக் கிளப்பியது. கிராமங்களின் விழாக்களின் போது அடிக்கடி இந்தப் படத்தின் வசனத்தை ஒலிக்கச் செய்வார்கள்.