Cinema History
நீங்க மாலை போட்டதுக்காக நாங்க என்ன சாமி படமா எடுக்க முடியும்? இளையராஜாவை சீண்டிய பாக்கியராஜ்
முந்தானை முடிச்சு படத்திற்கு இளையராஜா இசை அமைத்தார். பாடல்கள் எல்லாமே செம மாஸா இருந்தது. இந்தப் படத்தின் போது நடந்த ஒரு சுவாரசியமான சம்பவத்தை பாக்கியராஜ் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
‘விளக்கு வச்ச நேரத்துல’ பாட்டு எழுதும்போது முதல்ல பல்லவியை எழுதல. அதுக்குள்ள இளையராஜாவும், ஜானகி அம்மாவும் பாட்டை 6 டேக் பாடி முடிச்சிட்டாங்க. அப்புறம் தான் விளக்கு வச்ச நேரத்துல பல்லவி எழுதிக் கொடுத்தேன். அதைப் பார்த்துட்டு ‘இல்ல நீங்க 6 டேக் முடிஞ்சி தர்றீங்க.
இனிமே இதை எல்லாம் படிச்சிட்டு பாட முடியுமா?’ன்னு இளையராஜா மறுத்துட்டாரு. நீங்க தமிழ் தானே பாடுங்கன்னு சொன்னேன். இல்லன்னு சொன்ன அவரு அதுல உள்ள லைனை எல்லாம் படிச்சிட்டு ‘இதுல இப்படி எல்லாம் எழுதிருக்கீங்க. பாட முடியாது…’ன்னு சொல்லிட்டாரு.
இதையும் படிங்க… என்னது 1000 படங்களை இயக்கினாரா? தாய்மார்களே தூக்கிக் கொண்டாடிய வில்லன் இவர்தாங்க…
‘விளக்கு வச்ச நேரத்துல மாமன் வந்தான். மறைஞ்சு நின்னு பார்க்கையில தாகம் என்றான். நான் கொடுக்க அவன் குடிக்க அந்த நேரம் தேகம் சூடு ஏற… என்ன இப்படி எல்லாம் எழுதிருக்கீங்க?’ன்னு கேட்டார் இளையராஜா. ‘ஏங்க நல்ல கிளுகிளுப்பா எழுதிருக்கேன். நீங்க இப்படி சொல்லறீங்க’ன்னு சொன்னேன்.
‘இல்ல இல்ல. நான் இதெல்லாம் பாட மாட்டேன்… நான் மாலை போட்டுருக்கேன்’னு சொன்னாரு. ‘உங்களை யாரு மாலை போடச் சொன்னா? என்ன இப்படி சொல்றீங்கன்னாரு..? நீங்க மாலை போட்டதுக்காக நாங்க என்ன சாமி படமா எடுக்க முடியும்?’னு கேட்டேன். ‘ஒண்ணு மாலை போடுற நேரத்துல கம்போசிங்ல உட்காரலன்னு சொல்லுங்க.
இல்லன்னா மாலையை மறைச்சி வச்சிக்கிட்டு எங்களுக்குத் தேவையான கிளுகிளுப்புல சாமியை மறந்துடுங்க…’ ன்னு சொன்னேன். அப்புறம் அவருக்கு ஒரே கோபம். கடைசில பாட ஆரம்பிச்சாரு. கடைசி லைன் பல்லவி பாடும்போது ‘விளக்கு வச்ச நேரத்துல தன்னானன்னா…. மறைஞ்சி நின்னு பார்க்கையில தரனானன்னா…’ன்னு சொல்லிட்டுப் போயிட்டாரு.
இதையும் படிங்க… பிரபுவுக்கு அவ்ளோ பெரிய மனசா…? அதனால தான் எப்பவும் சிரிச்ச முகத்தோட இருக்காரா..?
அப்புறம் நான் ‘ஓகே’ ன்னுட்டேன். ‘இல்ல நான் வார்த்தையே பாடலையே’ன்னு கேட்டாரு. ‘இல்ல நீங்க ஒண்ணும் செக்ஸா பாட மாட்டேன்னு சொல்லிட்டீங்க. இப்ப நீங்க பாடுனது தான் ரொம்ப செக்ஸா இருக்கு…’ன்னு சொன்னேன். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
1983ல் பாக்கியராஜ் இயக்கி நடித்து வெளியான படம் முந்தானை முடிச்சு. இளையராஜா இசை அமைத்துள்ளார். நா.காமராசன் இந்தப் பாடலை எழுதியுள்ளார். இளையராஜாவும், எஸ்.ஜானகியும் இணைந்து பாடிய இந்தப் பாடலை இப்போது கேட்டாலும் சுகமாகத் தான் இருக்கும்.