நைட் 12 மணிக்கு கோவை சரளாவின் வீட்டு கதவை தட்டிய இயக்குனர்!.. மனுஷன் இப்படியா இருப்பாரு!..

by சிவா |
kovai sarala
X

தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகையாக நுழைந்தவர் கோவை சரளா. மனோரம்மா ஆச்சிக்கு பின் நகைச்சுவை நடிகையாக ஒரு ரவுண்டு வந்தவர் இவர். தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகர்கள் மட்டுமே இருந்த காலத்தில் கவுண்டமணி, எஸ்.எஸ்.சந்திரன், செந்தில் என பலருடனும் நடித்து ரசிகர்களை சிரிக்க வைத்தவர் இவர்.

கோவையை சேர்ந்தவர் என்பதால் அந்த ஊர் வட்டார வழக்கை அழகாக பேசி ரசிகர்களை கவர்ந்தார். அவரின் கீச் குரலும், கோவை பாஷையுமே ரசிகர்களை அவருக்கு பிடிக்க காரணமாக இருந்தது. வைதேகி காத்திருந்தாள் படத்தில் கவுண்டமணியுடன் கூட்டணி போட்டு நடிக்க துவங்கியவர் அதன்பின் நூற்றுக்கணக்கான படங்களில் அவருடன் நடித்தார்.

இதையும் படிங்க: உயிரை கையில் பிடிச்சிக்கிட்டே டேன்ஸ் ஆடிய சூர்யா!.. செம ரிஸ்க்கா இருக்கே!.. அட அந்த படமா?!…

அதேபோல், வடிவேலுவுடன் இணைந்து கோவை சரளா நடித்த படங்களும் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்தவையாக இருக்கிறது. குறிப்பாக கோவை சரளா வடிவேலுவை புரட்டி போட்டு அடிக்கும் காட்சிகள் ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைத்தது. இது வொர்க் அவுட் ஆகவே, பல படங்களிலும் வடிவேலுவை அடிக்கும் கதாபாத்திரத்தில் நடித்தார் கோவை சரளா.

சினிமாவில் நுழைந்த சமயத்தில் கதாநாயகியாக நடிக்க வேண்டும் என்றுதான் ஆசைப்பட்டார். ஆனால், கிடைத்தது என்னவோ கதாநாயகிகளின் தோழி வேஷம்தான். அப்படி பல படங்களில் நடித்த கோவை சரளா ஒரு கட்டத்தில் காமெடியை தேர்வு செய்து அதில் நுழைந்தார். அதன்பின் அவரே அடையாளமாக மாறிவிட்டது.

இதையும் படிங்க: விரைவில் சின்னத்திரையில் தலைகாட்டப் போகும் வடிவேலு! சீரியல்னுதான் பாக்குறீங்க.. அதான் இல்ல

ஒருநாள் நள்ளிரவு 12 மணிக்கு யாரோ அவரின் வீட்டு கதவை தட்டி இருக்கிறார்கள். யார் என திறந்துகொண்டே கதவை திறந்தால் அங்கே நின்றது பாக்கியராஜின் உதவியாளர்கள். அப்போது பாக்கியராஜ் ஒரு படம் எடுப்பதாகவும், அதில் அம்மா வேடத்தில் நடிக்க உடனே மேக்கப் போட்டு பார்க்க வேண்டும் என சொல்லி சரளாவை அனுப்பி இருக்கிறார்கள்.

covai

இந்த நேரத்தில் வரமாட்டேன் என சரளா சொல்ல அவரின் தந்தை அவரை சம்மதிக்க வைத்து அனுப்பி வைத்திருக்கிறார். விடிய விடிய மேக்கப் போட்டு அவரை ஓகே செய்து படத்தில் நடிக்க வைத்தனர். அப்படி உருவான திரைப்படம்தான் சின்ன வீடு. பாக்கியராஜை விட சின்ன வயதான சரளா அப்படத்தில் அவருக்கு அம்மாவாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story