Connect with us
vadivelu

Cinema News

விரைவில் சின்னத்திரையில் தலைகாட்டப் போகும் வடிவேலு! சீரியல்னுதான் பாக்குறீங்க.. அதான் இல்ல

Actor Vadivelu: தமிழ் திரை உலகில் நாகேஷுக்கு அடுத்தபடியாக அவருக்கு இணையான புகழை பெற்ற நகைச்சுவை நடிகராக விளங்கியவர் வைகை புயல் வடிவேலு. கவுண்டமணி செந்தில் இவர்கள் பீக்கில் இருக்கும்போதே ஒரு சாதாரண துணை நடிகராக நுழைந்த வடிவேலு இன்று அவர்கள் இருவரையும் தாண்டி ஒரு பெரிய அந்தஸ்தை பெற்ற நகைச்சுவை நடிகராக இந்த தமிழ் திரை உலகில் கோலோச்சி வருகிறார்.

கிட்டத்தட்ட அனைத்து முன்னணி நடிகர்களுடனும் சேர்ந்து நடித்த வடிவேலு இப்போது தனது இரண்டாவது இன்னிங்ஸை ஆரம்பித்திருக்கிறார். இடையில் அரசியல், விஜயகாந்துக்கு எதிராக அவர் பேசிய பேச்சு என ஒரு குறிப்பிட்ட காலம் வரை வடிவேலுவால் சினிமாவில் எழுந்திருக்க முடியவில்லை.

இதையும் படிங்க: யார பார்த்து கலாய்க்கிறீங்க… டாப் குக்கு டூப் குக்கு ஷோக்கு ஆதரவாக களமிறங்கிய பிரபலம்…

நீண்ட இடைவேளைக்கு பிறகு நாய் சேகர் ரிட்டன்ஸ் என்ற படத்தின் மூலம் மீண்டும் தனது இன்னிங்ஸை ஆரம்பித்தார் வடிவேலு இருந்தாலும் அந்த படத்தில் அவருடைய காமெடி ஒர்க் அவுட் ஆகவில்லை. அதன் பிறகு மாமன்னன் என்ற திரைப்படத்தில் குணச்சித்திர நடிகராக நடித்து ஒரு சிறந்த குணச்சித்திர நடிகர் என்பதை நிரூபித்தார் வடிவேலு. அப்படி இருந்தும் அடுத்தடுத்து வடிவேலுக்கு வாய்ப்புகள் வந்ததா என்றால் இல்லை.

இந்த நிலையில் விரைவில் சின்னத்திரை நிகழ்ச்சி ஒன்றில் வடிவேலு கலந்துகொள்ள இருக்கிறார் என்ற ஒரு தகவல் இணையத்தில் வைரலாகி வருகின்றது. அது சன் டிவியில் ஒளிபரப்பாக போகும் டாப்பு குக் டூப்பு குக் என்ற நிகழ்ச்சி தான். விஜய் டிவியில் குக்கு வித் கோமாளி நிகழ்ச்சியை போல சன் டிவியிலும் விரைவில் ஒரு சமையல் நிகழ்ச்சி ஒன்று தொடங்க இருக்கிறது. அதை வெங்கட் பட்தான் தொகுத்து வழங்க இருக்கிறார்.

இதையும் படிங்க: அட சமந்தான்னு நினைச்சிட்டோம்!.. ஓவர் டோஸ் கவர்ச்சியில் அதிரவிட்ட ஐஸ்வர்யா ராஜேஷ்!..

அதனால் விஜய் டிவிக்கு இணையாக இந்த நிகழ்ச்சியையும் பெரிய அளவில் கொண்டு போக வேண்டும் என்ற காரணத்தினால் வடிவேலுவை இந்த நிகழ்ச்சியில் இறக்க இருக்கிறார்கள். ஆனால் வடிவேலு தரப்பில் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள அதிக சம்பளம் கேட்கப்படுவதாக ஒரு தகவல் வெளியாகியிருக்கிறது. ஒருவேளை அவர் கேட்கிற சம்பளத்தை சன் டிவி கொடுத்தால் விரைவில் இந்த நிகழ்ச்சியின் மூலம் சின்னத்திரையில் அறிமுகமாவார் வடிவேலு என்று சொல்லப்படுகிறது.

google news
Continue Reading

More in Cinema News

To Top