பிரபுதேவாவுக்கு அல்வா கொடுத்த ஏ.ஆர்.ரஹ்மான்!.. ரிலீஸ் தள்ளிப்போகும் மூன் வாக்!…

X
பிரபுதேவாவுக்கு அல்வா கொடுத்த ஏ.ஆர்.ரஹ்மான்!.. ரிலீஸ் தள்ளிப்போகும் மூன் வாக்!…

தமிழ் சினிமாவில் நடன இயக்குனராக இருந்து சினிமாவில் ஹீரோவாக நடிக்க தொடங்கியவர் பிரபுதேவா. ஆரம்பத்தில் இவர் நடிப்பில் வெளியான அனைத்து படங்களும் சூப்பர் ஹிட் அடித்தன, குறிப்பாக ஏ.ஆர் ரஹ்மான் இசையில் பிரபுதேவா நடித்த திரைப்படங்கள் அவருக்கு பெரிய அளவில் கை கொடுத்தன.

ரஹ்மானின் துள்ளலான இசைக்கு பிரபுதேவா துள்ளலான நடனத்தை கொடுத்து ரசிகர்களை கவர்ந்தார். காதலன், லவ் பேர்ட்ஸ், மிஸ்டர் ரோமியோ, மின்சார கண்ணா போன்ற திரைப்படங்கள் அப்படி வெளியாகி ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றன.

தற்போது 29 வருடங்கள் கழித்து பிரபுதேவாவும், ஏ.ஆர்.ரஹ்மானும் மூன் வாக் என்கிற திரைப்படத்தில் மீண்டும் இணைந்துள்ளனர். இந்தத் திரைப்படத்தை மனோஜ் நிர்மலா ஸ்ரீதரன் என்பவர் இயக்கியிருக்கிறார். ஏற்கனவே இரண்டு மூன்று முறை ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு படம் தள்ளி வைக்கப்பட்டது.

ஒரு வழியாக வருகிற தீபாவளிக்கு இந்த படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டிருந்தது. ஆனால் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் உருவாகி வரும் ராமாயணா படம் தீபாவளிக்கு ரிலீஸாகிறது. எனவே, அந்த படத்திற்கு இசை பணி இருப்பதால் Moon Walk படத்திற்கு இசை பணிகளி முடித்து கொடுக்க முடியாது என ரஹ்மான் கை விரித்து விட்டாராம். எனவே முன் வாக் திரைப்படம் வருகிற டிசம்பர் மாதம் வெளியாகும் என கணிக்கப்படுகிறது.