Connect with us

Cinema News

யார பார்த்து கலாய்க்கிறீங்க… டாப் குக்கு டூப் குக்கு ஷோக்கு ஆதரவாக களமிறங்கிய பிரபலம்…

Top Cooku Dupe Cooku: தமிழ் ரியாலிட்டி ஷோவில் மிகப்பெரிய மைல்கல்லை பிடித்தது குக் வித் கோமாளி. இந்த ஷோவின் ரீமேக்காக தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாக இருக்கும் டாப் குக்கு டூப் குக்கு ஷோ பற்றிய பிரச்னை தற்போதைய சமூகவலைத்தள ட்ரெண்டாக மாறி இருக்கிறது.

சமையல் ஷோக்களில் புது லாஜிக்கை பிடித்தது குக் வித் கோமாளி. ஒரு குக்குடன் கோமாளி வந்து அந்த எபிசோடை அட்டகாசம் செய்வார்கள். இதற்கு நடுவர்களாக வெங்கடேஷ் பட் மற்றும் தாமு இருவரும் இருந்தனர். இந்த ஷோவை மீடியா மேசன்ஸ் தயாரித்து வந்தது.

இதையும் படிங்க: ரஜினியிடம் நடிகைக்கு இருந்த 43 வருட பகை!. கடைசி வரைக்கும் நடக்காமலே போயிடுச்சே!..

இந்த ஷோவின் ஐந்தாவது சீசன் தொடங்குவதாக இருந்த நேரத்தில் ஷோக்கு முக்கிய பங்கு வகித்த வெங்கடேஷ் பட் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறினார். இது பலருக்கு அதிர்ச்சியை கொடுத்தது. எண்டெர்டெயின்மெண்ட் கன்டென்ட்களுக்கு முக்கிய பங்கு அவருடையது தான். 

இந்நிலையில் தான் தன்னுடைய புது ஷோவை அறிவித்தார். அதே நேரத்தில் விஜய் டிவியின் குக் வித் கோமாளி நிகழ்ச்சி தொடங்கியது. இதில் வெங்கடேஷ் பட் இல்லாமல் போனது அங்கிருப்பவர்கள் சொல்லாமல் விட்டாலும் ரசிகர்கள் அவரை மிஸ் செய்ததாக தொடர்ச்சியாக கமெண்ட் செய்தனர். 

இதையும் படிங்க: விஜய் ஆடிய போங்காட்டம்! தயாரிப்பாளரை எங்கு கொண்டு போய் நிறுத்தியிருக்கு பாருங்க

அதே நேரத்தில் குக் வித் கோமாளிக்கு எதிராக டாப் குக்கு டூப் குக்கு என்ற ஷோ சன் டிவியில் ஒளிபரப்பாக இருப்பதாக நேற்று அறிவிப்பு வெளியானது. அதில் இருந்து பலரும் விஜய் டிவியின் இந்த ஷோவையும் காப்பி அடிச்சிட்டீங்களா எனக் கேள்வி எழுப்பி வந்தனர். ஆனால் இது காப்பி கிடையாது என்ற ஆதரவு குரலும் இருந்தது.

குக் வித் கோமாளியின் ஒரிஜினல் தயாரிப்பு நிறுவனம் மீடியா மேசன்ஸ். இந்த நிறுவனம் விஜய் டிவியில் இருந்து விலகி விட்டது. அவர்கள் தான் தங்களுடைய பிராடக்ட்டை சன் டிவியில் இறக்கி இருக்கின்றனர். இதனால் குக் வித் கோமாளியை இயக்கும் தற்போதைய பாக்ஸ் ஆபிஸ் டீம் தான் காப்பி என கமெண்ட்களை பார்க்க முடிகிறது.

அதையே ஆதரிக்கும் பொருட்டு வெங்கடேஷ் பட் தன்னுடைய சமீபத்திய போஸ்ட்டில், கண்டெண்ட் தான் ராஜா. ஒரிஜினல் பேரரசர் என்ற டேக்குடன் மீடியா மேசன்ஸின் புதிய நிகழ்ச்சி எனப் பதிவிட்டு இருக்கிறார். இதில் விக்டரி பார் ஒரிஜினல் என்ற ஹேஸ்டேக்கையும் இணைத்து இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: ரஜினியின் செல்லப்பெயர் என்ன தெரியுமா? அடிக்கடி மெமோ வாங்கும் சுவாரஸ்யங்கள்…

google news
Continue Reading

More in Cinema News

To Top