ரஜினியின் செல்லப்பெயர் என்ன தெரியுமா? அடிக்கடி மெமோ வாங்கும் சுவாரஸ்யங்கள்…

Rajinikanth: சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் தன்னுடைய நடிப்புக்கு வரும் முன்னர் கண்டெக்டராக வேலை செய்தவர். அப்போது அவருடன் பழகிய நண்பர்களுடன் பழகிய அனுபவங்கள் குறித்த தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

ரஜினியின் நண்பர் ராஜ்பகதூர் பகிர்ந்து இருந்த சுவாரஸ்ய தகவல்களில் இருந்து, நான் ரஜினியுடன் பேசிக் கொண்டே நடந்து செல்லுவேன். ரஜினி முகத்தைத் திரும்பிப் பார்க்கும் கேப்பில் எனக்கு முன்னே தூரமாக நடந்து சென்று இருப்பான். நானோ ஓடிப்போய் ரஜினியின் முன் நின்று, கொஞ்சம் மெதுவாகத்தான் நடக்கலாமே?.

இதையும் படிங்க: விஜய் ஆடிய போங்காட்டம்! தயாரிப்பாளரை எங்கு கொண்டு போய் நிறுத்தியிருக்கு பாருங்க

உன் வேகத்துக்கு என்னால் நடக்க முடியாதடா" என்பாராம். ஆனால் ரஜினியோ "அட போடா உனக்காக நான் மெதுவாக நடக்கிறேன். இதையே வேகம்னு சொல்றே. சோம்பேறி என்பாராம். ரஜினிக்கும் ராஜ்பகதூருக்கும் பழக்கம் ஏற்பட்டதில் இருந்தே சிகரெட் பிடிப்பாராம். அப்போதே சிகரெட்டில் ஸ்டைல் செய்வாராம். இதை பார்த்த ராஜ்பகதூர், என்ன இதெல்லாம் எனக் கேட்டால், சினிமாவில் நடிக்கும் என்னை யார் பார்ப்பா?

இப்படி செஞ்சா தானே பார்ப்பாங்க என்பாராம். பஸ்ஸில் ரஜினிகாந்த் ரைட் சொல்வதும் வித்தியாசமாக தான் இருக்குமாம். தலைமுடி நெற்றியில் வந்து விழுந்து அதில் ஸ்டைல் செய்வதும் அவர் கண்டெக்டராக இருக்கும் போதே பழகியது தானாம். சின்ன ரெஸ்ட்டில் கூட ரஜினிக்கு சிகரெட் பிடிக்கும் பழக்கம் இருந்ததாம். சில விநாடிகள் பஸ் நின்றால் கூட இரண்டு மூன்று முறை புகைத்துவிட்டு தூக்கி எறிவாராம்.

இதையும் படிங்க: ரஜினியிடம் நடிகைக்கு இருந்த 43 வருட பகை!. கடைசி வரைக்கும் நடக்காமலே போயிடுச்சே!..

இதுமட்டுமல்லாமல், பஸ்ஸில் ரஜினிகாந்த் அடிக்கடி சில்லறை விஷயம் காரணமாக கைகலப்பில் இறங்கி 'மெமோ' வாங்கி விடுவாராம். கல்லூரியில் படிக்கும்போது தான் ரஜினிக்கு மது பழக்கம் உருவானதாம். நண்பர்களுடன் சேர்ந்து மது அருந்தினாலும் வெளியில் சாப்பிடவே மாட்டாராம். சரியாக வீட்டுக்கு சாப்பிட சென்றுவிடுவாராம். ரஜினி கறுப்பு நிறமென்பதால் 'கரியா' என்றுதான் ரஜினியை நண்பர்கள் அழைப்பது வழக்கமாம்.

 

Related Articles

Next Story