Dhanush: தள்ளிப்போகும் தனுஷ் – சிறுத்தை சிவா படம்!.. காரணம் இதுதான்!..

X
Dhanush: தள்ளிப்போகும் தனுஷ் – சிறுத்தை சிவா படம்!.. காரணம் இதுதான்!..

சிறுத்தை திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் சிவா. அதன்பின் அஜித்தை வைத்து வீரம், விவேகம், வேதாளம், விஸ்வாசம் ஆகிய திரைப்படங்களை இயக்கினார். விஸ்வாசம் திரைப்படத்திற்கு பின் அவர் இயக்கிய அண்ணாத்த, கங்குவா போன்ற திரைப்படங்கள் பாக்ஸ் ஆபிஸில் ஹிட் அடிக்கவில்லை. கங்குவா படம் அதிக அளவில் நெகட்டிவ் விமர்சனங்களை பெற்றதால் சிறுத்தை சிவா இயக்கத்தில் நடக்க எந்த நடிகரும் முன் வரவில்லை..

ஒருவழியாக பல நடிகர்களிடம் கதை சொல்லி தற்போது அவர் இயக்கத்தில் நடித்த தனுஷ் ஒப்பு கொண்டிருக்கிறார். இந்த திரைப்படத்தை மாஸ்டர் படத்தை தயாரித்த லலித்குமார் தயாரிக்கவிருக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு வருகிற டிசம்பர் மாதம் துவங்கவிருந்தது.

ஆனால் தமிழரசன் பச்சைமுத்து இயக்கத்தில் தனுஷ் நடித்து வரும் புதிய படத்தின் படப்பிடிப்பு சில காரணங்களால் காலதாமதமாகி தற்போது துவங்கியிருப்பதால் அந்த படத்தின் படப்பிடிப்பே டிசம்பர் மாதம் வரை நடக்கும் என்று சொல்லப்படுகிறது. எனவே, தனுசும் சிறுத்தை சிவாவும் இணையும் படம் ஜனவரி மாதம் பொங்கலுக்கு பின் துவங்கவிருக்கிறதாம்..

அதோடு தமிழரசன் பச்சையமுத்து படத்தை முடித்துவிட்டு 15 நாட்கள் தனுஷ் வெளிநாடு சென்று ஓய்வெடுக்கவும் திட்டமிட்டுள்ளாராம்.