உடம்புக்கு நல்லது இல்லைன்னு சொல்லியும் கேட்கல!.. அனிருத் தந்தை ரவி பேட்டி…

X
உடம்புக்கு நல்லது இல்லைன்னு சொல்லியும் கேட்கல!.. அனிருத் தந்தை ரவி பேட்டி…

ரஜினியின் உறவினரான அனிருத் கல்லூரியில் படிக்கும்போது இசையில் ஆர்வம் கொண்டு பல திருமண நிகழ்ச்சிகளில் நண்பர்களோடு சேர்ந்து போய் நிகழ்ச்சிகளை நடத்தினார். தனுஷோடு பழக்கம் ஏற்பட்டு இருவரும் இணைந்து ‘ஒய் திஸ் கொலவெறி’ ஆல்பம் பாடலை உருவாக்கினார்கள்.

அந்த பாடல் இந்தியாவில் மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் பிரபலமாகி youtube-ல் பலகோடி வியூஸ்களை பெற்றது.
அதன்பின் தனுஷின் திரைப்படங்களுக்கு இசையமைக்க தொடங்கினார் அனிருத். அந்த பாடல்கள் எல்லாம் சூப்பர் ஹிட் அடித்தது. தொடர்ந்து சிவகார்த்திகேயன் உள்ளிட்ட பலரின் படங்களுக்கும் இசையமைத்தார். ஒரு கட்டத்தில் ரஜினி, கமல், விஜய், அஜித் போன்ற பெரிய நடிகர்களின் படங்களுக்கு அனிருத்தே இசை என மாறியது..

விஜயின் கத்தி, மாஸ்டர், பீஸ்ட், லியோ, ஜனநாயகன் ஆகிய படங்களுக்கு அனிருத்தே இசையமைத்தார். அதேபோல் ரஜினிக்கு தர்பார், ஜெயிலர், வேட்டையன், கூலி மற்றும் ஜெயிலர் 2 ஆகிய படங்களுக்கு அனிருத்தான் இசை. பொதுவாக இசையமைப்பாளர்கள் இரவில் தூங்காமல் வேலை செய்வார்கள்.. ஏ.ஆர் ரகுமான் கூட அப்படித்தான்.. இரவு நேரங்களில் இசையமைத்துவிட்டு பகலில் தூங்குவார்.. அந்த பழக்கம் அனிருத்துக்கும் இருக்கிறது..

இந்நிலையில், இது தொடர்பாக ஊடகம் ஒன்றில் பேசிய அனிருத்தின் தந்தை ரவி ராகவன் ‘உலகமே தூங்கும்போது அனிருத் தூங்கிக் கொண்டிருப்பார்.. மற்றவர்கள் வேலை செய்யும் போது அவர் தூங்குவார்.. நீண்ட நாட்களாக இப்படி செய்தால் உடல் நலத்திற்கு நல்லதல்ல என்றாலும் அவருடைய இந்த வித்தியாசமான ஸ்டைல்தான் சிறந்த இசையை கொண்டு வருகிறது.. அப்படி இருக்கும் போது ஒரு அப்பாவாக அவரை என்னால் கேள்வி கேட்க முடியவில்லை’ என அவர் கூறியிருக்கிறார்.