Jailer2: முன்பதிவில் ரூ.50 கோடி!.. ரீஸுக்கு முன்பே மாஸ் காட்டும் ஜெயிலர் 2!..

X
Jailer2: முன்பதிவில் ரூ.50 கோடி!.. ரீஸுக்கு முன்பே மாஸ் காட்டும் ஜெயிலர் 2!..

கூலி திரைப்படத்திற்கு பின் ரஜினி நடித்து முடித்திருக்கும் திரைப்படம் ஜெயிலர் 2. சன் பிக்சர்ஸ் தயாரிக்க நெல்சன் இயக்க உருவாகியுள்ள ஜெயிலர் 2 திரைப்படம் வருகிற 15ம் தேதி வெளியாகவிருக்கிறது.

முதல் பாகத்தில் நடித்த ரம்யா கிருஷ்ணன், மிர்னா, மோகன்லால், சிவராஜ்குமார் ஆகியோரின் இந்த படத்தில் நடித்திருக்கிறார்கள். அதோடு முக்கிய வில்லன்களாக சூரஜ் வெஞ்சரமூடு மற்றும் எஸ்.ஜே.சூர்யா ஆகியோர் நடித்துள்ளனர். மேலும் ஹிருத்திக் ரோஷன், விஜய் சேதுபதி ஆகியோர் சிறப்பு கேமியோ வேடத்தில் நடித்துள்ளனர்.

சமீபத்தில் ஜெயிலர் 2 டிரெய்லர் வீடியோவும் வெளியாகி ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது. மேலும், ஜெயிலர் 2 சூப்பர் ஷோ என்கிற பெயரில் ஒரு புரமோஷன் நிகழ்ச்சியுடம் நடத்தப்பட்டு தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டது.

ஒருபக்கம், ஜெயிலர் 2 படத்துக்கான முன்பதிவு சில நாட்களுக்கு முன்பு துவங்கிய நிலையில் ரிலீஸுக்கு முன்பே ரூ.50 கோடி வரை வசூலாகியிருப்பதாக செய்திகள் வெளியாகியிருக்கிறது.