சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் இயக்கி சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்திருக்கும் திரைப்படம் ஜெய்லர் 2. ஏற்கனவே 2023ம் வருடம் ஜெயிலர் முதல் பாகம் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த நிலையில் தற்போது இரண்டாம் பாகத்தை உருவாகியிருக்கிறார்கள்.
ஜெயிலர் 2 திரைப்படம் வருகிற 15ம் தேதி உலகமெங்கும் வெளியாகும் என ஏற்கனவே அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு விட்டது. மேலும், ஆன்லைன் புக்கிங் தற்போது நடைபெற்ற வருகிறது..
இந்நிலையில்தன, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல், ஓசூர் பகுதிகளில் உள்ள ‘42 மல்டிபிளக்ஸ்’ தியேட்டர்களில் ஜெயிலர் 2 வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. தியேட்டர் அதிபர்கள் விநியோகஸ்தர்களிடம் வழக்கத்திற்கு மாறாக கூடுதல் பங்கு கேட்பதாகவும், ஆனால், அதை வினியோகஸ்தர்கள் ஏற்கவில்லை எனவும் சொல்லப்படுகிறது.
எனவே, படத்தை வரும் 15ம் தேதி வெளியிடுவதில்லை என 42 மல்டிபிளக்ஸ் முடிவு செய்யப்பட்டிருப்பதாக சொல்லப்படுகிறது.
இதன் காரணமாக இந்த மாவட்டங்களில் டிக்கெட் முன்பதிவு தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருக்கிறது. எப்படி இருந்தாலும் விரைவில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு சுமூக முடிவு எட்டப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.







