ஒரே நேரத்தில் படம் பார்க்க வந்த எம்.ஜி.ஆர் – சிவாஜி!.. பதறிப்போய் பாக்கியராஜ் செய்த வேலை!…

Published on: March 14, 2023
bhagyaraj
---Advertisement---

தமிழ் திரையுலகில் திரைக்கதை மன்னனாக வலம் வந்தவர் பாக்கியராஜ். கோவை சேர்ந்த இவர் பாரதிராஜாவிடம் உதவியாளராக வேலை செய்து பின் நடிகராகும், இயக்குனராகவும் மாறினார். இவரின் திரைப்படங்களுக்கு பெண்கள் மத்தியில் அவ்வளவு வரவேற்பு இருக்கும். ஏனெனில், தாய்குலங்களை கவரும் படி காட்சிகளை அமைத்திருப்பார் பாக்கியராஜ்.

ஒருகட்டத்தில் இவரின் திரைக்கதைக்கு எம்.ஜி.ஆரே ரசிகராக மாறினார். எம்.ஜி.ஆருடன் நெருங்கிய பழகிய நடிகர் ஒருவர் என்றால் அது பாக்கியராஜ் மட்டுமே. அவ்வளவு ஏன் தன்னுடைய அரசியல் வாரிசு என பாக்கியராஜை அறிவித்தார் எம்.ஜி.ஆர். அந்த அளவுக்கு பாக்கியராஜ் மீது எம்.ஜி.ஆருக்கு பிரியம் உண்டு.

Also Read

bhagyaraj
bhagyaraj

பாக்கியராஜ் இயக்கி நடித்த திரைப்படம் தாவணி கனவுகள். இந்த படத்தில் சிவாஜியும் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார். இந்த படம் உருவான போது எம்.ஜி.ஆர் முதல்வராக இருந்தார். படம் ரிலீஸாவதற்கு 3 நாட்களுக்கு முன்பு அவருக்கு திரைப்படத்தை காண்பிக்க பாக்கியராஜ் ஏற்பாடு செய்தார். அதேநாளில் சிவாஜியும் படம் பார்க்க ஆசைப்பட்டார். இருவரும் ஒரே நேரத்தில் ஒரே இடத்தில் படம் பார்க்க வந்தால் யாரை உபசரிப்பது என்பதில் சிக்கல் ஏற்படும் என நினைத்த பாக்கியராஜ் காலையில் சிவாஜும், மாலையில் எம்.ஜி.ஆரும் படம் பார்ப்பது என முடிவு செய்தார்.

thavani
thavani

ஆனால், தனக்கு வேலை இருப்பதாக கூறி தானும் மலை காட்சிக்கு வருவதாக சிவாஜி கூறிவிட, அதிர்ச்சியான பாக்கியராஜ் அவரை வேறு இடத்தில் படம் பார்க்க வைத்தார். எம்.ஜி.ஆரை வரவேற்று படம் பார்த்துக்கொண்டிருந்த பாக்கியராஜ், இடைவேளையில் சிவாஜி படம் பார்த்த தியேட்டருக்கு சென்று அவரிடம் பேசினார்.

இதை ஏற்கனவே தெரிந்து வைத்திருந்த சிவாஜி ‘எம்.ஜி.ஆர் இந்நாட்டின் முதல்வர். இப்படத்தில் நான் நடித்திருக்கிறேன். என்னை நாளை கூட நீ வந்து சந்தித்து பேசலாம். அவரை போய் கவனி’ என திட்டியுள்ளார். அங்கிருந்து வேகமாக பாக்கியராஜ் எம்.ஜி.ஆர் படம் பார்க்கும் தியேட்டருக்கு சென்றாராம். என்னாச்சி. எங்கே போய் வந்தாய் என எம்.ஜி.ஆர் கேட்க அவரிடம் உண்மையை சொல்லிவிட்டாராம்.

bhagyaraj
bhagyaraj

அதற்கு எம்.ஜி.ஆர் ‘சிவாஜி இப்படத்தில் நடித்துள்ளார். அவரைத்தான் நீ வரவேற்பு உபசரிக்க வேண்டும். படம் பார்த்துவிட்டு உன்னுடன் நான் தொலைப்பேசியில் கூட பேசிக்கொள்வேன். நீ முதலில் சிவாஜியை போய் பார்’ என சொல்ல, எங்கு செல்வது? எங்கு இருப்பது என குழம்பி தவித்தாராம் பாக்கியராஜ்.

இந்த தகவலை நடிகர் மற்றும் இயக்குனரான சீதா லட்சுமணன் ஒரு சினிமா விழாவில் பேசியுள்ளார்.

இதையும் படிங்க: அந்த சம்பவம் மட்டும் நடக்கலைனா கீரவாணி சினிமாவிற்கே வந்திருக்க மாட்டார் – இளையராஜாதான் காரணமாம்..!